கேரளாவில் குடியரசு தலைவர் ஆட்சி? சுப்பிரமணியன் சுவாமி

கேரளாவில் குடியரசு தலைவர் ஆட்சி? சுப்பிரமணியன் சுவாமி

சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என  ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சந்திரவாட் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆர்.எஸ்.எஸ் உள்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக கேரளாவில் வன்முறை நடந்து வருவதாக கூறப்படுகிறது,. சமீபத்தில் கூட நடபுரத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டுகளை வீசி சென்றதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் சந்திரவாட் கூறிய கருத்து குறித்து எதுவும் கூறாத பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த குண்டுவீச்சு குறித்து கூறியபோது, ‘கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை எச்சரிக்க வேண்டிய நேரம் இதுதான் என்றும் அங்கு தொடர் வன்முறைகள் நிலவி வந்தால், விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர நேரிடும் என்றும் கூறினார். மேலும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சுவாமி, கேரள மாநிலம் வாழ்வதற்கு ஏற்ற சூழலற்றதாகி வருகிறது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply