பென்டகன் உள்பட அமெரிக்கா முழுவதையும் தாக்குவோம். வடகொரியா எச்சரிக்கை

obama-kim_jong_un__2178245bசோனி பிக்சர்ஸ் நிறுவன வலைதள ஊடுருவல் தொடர்பாக வட கொரியா மீது குற்றம் தொடர்ந்து சாட்டுவதை அமெரிக்கா நிறுத்தாவிட்டால், அந்த நாட்டின் மீது தாக்குதல் அதிரடி தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் “தி இன்டர்வியூ’ என்ற திரைப்படைத்தைத் தயாரித்து கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது. அந்த படத்தின் திரைக் கதையில், வட கொரியாவின் தற்போதைய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சோனி பிக்சர்ஸ் நிறுவன வலைதளத்தில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவி, நிறுவனத்தின் புதிய திரைக் கதைகள், ஊழியர்கள் குறித்த விவரங்கள், அவர்களது மின்னஞ்சல்கள், சம்பளப் பட்டுவாடா விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியத் தகவல்களையும், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, வெளியிடுவதற்குத் தயாராக உள்ள  திரைப்பட நகல்களையும் திருடி வெளியிட்டனர்.

இதில் வட கொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் வட கொரிய தேசிய பாதுகாப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”வட கொரியா குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பொறுப்பற்ற முறையில் வீண் வதந்தியைப் பரப்பி வருகிறார்.

இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்க அதிபர் மாளிகை, ராணுவத் தலைமையகம் (பென்டகன்) உள்பட அமெரிக்கா முழுவதும் தாக்குதல் நிகழ்த்துவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply