ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அந்நாட்டு அரசுகளை திணறடித்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகல் நேற்று குர்தீஷ் நாட்டு வீரர் ஒருவரை தலையை அறுத்து கொலை செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வெள்ளை மாளிகைக்கு சென்று ஒபாமாவின் தலையையும் வெட்டுவோம் என அவர்கள் சூளுரைத்துள்ளனர். இந்த வீடியோ ஐ.எஸ்.ஐ.எஸ். இணையதளத்தில் பதிவாகியுள்ளது.
குர்தீஷ் நாட்டு வீரர் ஒருவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர். அந்த வீடியோவில் முகமூடி அணிந்து பேசியுள்ள ஒரு தீவிரவாதி அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வெள்ளை மாளிகையின் உள்ளே நுழைந்து ஒபாமாவின் தலையை அறுத்து குப்பையில் தூக்கு போடுவோம் என்றும், இஸ்லாமியத்தை எதிர்க்கும் அனைவருக்கும் இதுவே கதி என்றும் ஒரு தீவிரவாதி ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது உலகமெங்கும் மிக வேகமாக அதிர்ச்சியுடன் பரவி வருகிறது.