குக்கர் சின்னத்தில் நின்று, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: தங்க தமிழ்செல்வன்

குக்கர் சின்னத்தில் நின்று, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: தங்க தமிழ்செல்வன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ள நிலையில் தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் தினகரன் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றுவார். ஆர்.கே.நகரை போலவே குக்கர் சின்னத்தில் நின்று, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை எங்களிடம் உள்ளது.

தமிழக அமைச்சர்கள் குழப்பத்தில் உள்ளனர், முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். விரைவில் அவர்களது குழப்பம் நீங்கும் என்று நம்புகின்றேன். தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக அதிமுக கட்சி நிர்வாகிகளை நீக்கி நாடகம் நடத்துகின்றனர். தைரியம் இருந்தால் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ரஜினியின் முடிவு காலம் தாழ்ந்தது. இவ்வாறு தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply