தேமுதிக இல்லாமலேயே வெற்றி பெறுவோம். ஸ்டாலினை அடுத்து இளங்கோவனும் அறிவிப்பு

தேமுதிக இல்லாமலேயே வெற்றி பெறுவோம். ஸ்டாலினை அடுத்து இளங்கோவனும் அறிவிப்பு

EVKS(1)திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைய தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கருணாநிதி ஒரு பக்கம் கூறிவரும் நிலையில், இன்னொரு பக்கம் மு.க.ஸ்டாலின் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என குழப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் திமுக கூட்டணியில் தேமுதிக இணையாவிட்டாலும் தங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் தெரிவித்துள்ளதால், பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தேமுதிக, திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று விருப்பிய காங்கிரஸ் தற்போது தேமுதிக இல்லாமல் போட்டியிடவே விரும்புவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக கூட்டணியில் இணைந்தால் தங்களுக்குரிய முக்கியத்துவம் குறையும் என்றும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் கணிசமாக குறையும் என்று கணக்கு போடும் காங்கிரஸ் தேமுதிக இந்த கூட்டணியில் இணையவில்லை என்றால் கணிசமான தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையுடன் இருப்பதாக தெரிகிறாது.

இதனால்தான் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு ஆலோசனை கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியபோது, “தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவற்றை குறித்து விவாதித்ததாகவும், தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் இளங்கோவன் கூறினார்.

Leave a Reply