90% வெற்றி. போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுங்கள். கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள்
ஜல்லிக்கட்டுக்காக தன்னலம் பாராது தமிழர்கள் என்ற உள்ளுணர்வு போராடிய இளைஞர்களுக்கு காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு முன்னோடிகள் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சேனாபதி மாணவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ,
இப்போது நாம் 90 சதவீதம் வெற்றி பெற்று விட்டோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முழு வெற்றி தான் நாளை அல்லு நாளா மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிடும். அதனால் மாணவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்.
மேலும் மாணவர்களை போராட்டத்தை திரும்ப பெற சொல்ல உரிமை இல்லை என்றும், ஆனால் வேண்டுகோள் விடுப்பதாகவும் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் டாக்டர்.ராஜசேகரன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி அகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.