இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இணையதளம் வாயிலாக தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில் இன்று அளித்த பேட்டி ஒன்றில் வெளிநாடுகளில் கூட இன்னும் இணையதள மூலம் தேர்தல் நடத்துவது முழுவதுமாக சாத்தியமாகவில்லை. இந்நிலையில் இந்தியாவில் இணணயதள தேர்தல் இப்போதைக்கு சாத்தியமில்லை.
வாக்கு எண்ணிக்கையை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை. இது சாத்தியமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை இணையத்தில் ஒளிபரப்பும் எண்ணம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை
144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து புகார் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கத்தில் மட்டும்தான் 144 போடப்பட்டது. வேறு எதுவும் உள்நோக்கம் இல்லை.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.