மத்திய அரசு பணியில் சேர வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கும் நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கப்பட்டுள்ள 3261 காலி பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும் என தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது
அந்த வகையில் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் போட்டித்தேர்வுக்கான அனைத்து பாடங்களும் இடம் பெற்றுள்ளன
இந்த இணையதளத்தில் உள்ள போட்டித்தேர்வுக்கான கேள்விகளையும் பதில்களையும் டவுன்லோட் செய்து மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே மத்திய அரசு தேர்வில் பாஸ் செய்ய விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்