வார ராசிபலன் 28.04.2014 முதல் 04.05.2014

7மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 11-ல்  சுக்கிரன் உலவுவது சிறப்பாகும். சனி வக்கிரம் பெற்றிருப்பதால் நலம் புரிவார். குரு 3-ல் இருந்தாலும் 7, 9, 11-ஆம் இடங்களையும், சனி, ராகு, சுக்கிரன் ஆகியோரையும் பார்ப்பது சிறப்பாகும். சூரியன் 5-ஆம் வீட்டுக்கு அதிபதியாகி ஜன்மராசியில் இருப்பதால் நலம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களால் நலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் ஆதாயம் கொண்டுவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். 28-ஆம் தேதி முதல் இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாழ்க்கை வசதிகள் பெருகும். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 28.

திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 6, 9.

ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.

குரு. ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் முக்கியமான .எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்ப்புக்கள் விலகும்,. பொருள்வரவு அதிகமாகும். பேச்சாற்றல் வெளிப்படும். ஆன்மிகம். அரசியல் பற்றிய பேச்சு அதிகம் இருக்கும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உலவத் தொடங்குவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட மனம் மாறி உங்களுக்கு உதவுவார்கள். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 27.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

 

மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 11-ல் சூரியனும் புதனும் கேதுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப்பணிகள் நிறைவேறும். தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாரப் பின்பகுதியில் பொருள்வரவு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 4-ல் வக்கிர செவ்வாயும், 5-ல் வக்கிர சனியும் உலவுவதால் தாய் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 27, 28.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

எண்கள்: 1, 5, 6, 7.

எண்கள்: 3, 4, 6.

கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தெய்வ காரியங்களுக்காகவும், தர்ம காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். வியாபாரம் வளர்ச்சி பெறும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். ஆன்மிகவாதிகளும் அறப்பணியாளர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் சொத்துக்கள் சேரும். சுகம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 27, 28.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பணவரவு அதிகரிக்கும். சுகானுபவம் உண்டாகும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். எடுத்த காரியங்கள் நிறைவேறும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 2-ல் வக்கிர செவ்வாயும், 3-ல் வக்கிர சனியும் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். சூரியன் 9-ல் புதன், கேது ஆகியோருடன் உலவுவதால் ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். 28ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். கலைத்துறையினருக்கு மந்தநிலை விலகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொழில் ரீதியாக ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 28 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.

எண்கள்: 1, 3, 4.

கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.

கோசாரப்படி 8-ல் புதன் உலவுவது மட்டுமே சிறப்பாகும். அவரும் பாவக்கிரகங்களான சூரியனுடனும் கேதுவுடனும் கூடியிருக்கிறார். எதிர்ப்புகள் அதிகரிக்கவே செய்யும். பெண்களால் மன அமைதி கெடும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேரான வழியில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது அவசியமாகும். வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் பிரச்னைகள் சூழும். கண், பல், வாய், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வாரப்பின்பகுதியில் சந்திரன் 8-ஆமிடம் மாறுவதால் சோதனைகள் அதிகமாகும். இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். மாமூலாகச் செய்துவரும் காரியங்களிலும் கூட அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 25, 27.

திசை: வடக்கு.

எண்: 5.

துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய. உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். கலைஞானம் வெளிப்படும். அதிர்ஷ்டவாய்ப்புக்கள் அதிகமாகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மக்களால் நலம் உண்டாகும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். வீண் செலவுகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 27, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

எண்கள்: 3, 6.

 

விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் கேதுவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். சனி12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். நண்பர்கள், உறவினர்கள் வருகை மனத்திற்குத் தெம்பூட்டும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் சுபிட்சம் கூடும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். இன்ஜினீயர்களது நிலை உயரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். குடும்ப நலம் சீராகும். வீண் செலவுகள் குறையும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பயணத்தால் அதிகம் அனுகூலமிராது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்.25, 27, 28.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

 

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது விசேடமாகும். சூரியனும் புதனும் 5-ல் இருப்பதால் நலம் உண்டாகும். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், கட்டடப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள். வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகளில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். செல்வ நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் கூடும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 27, 28.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.

எண்கள்: 7-ஐ தவிர இதர எண்கள் அதிர்ஷ்டமானவை

 

வார ராசிபலன்: 25-04-2014 முதல் 01-05-2014 வரை

மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் ராகுவும் உலவுவதால் மனமகிழ்ச்சி கூடும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சின் மூலம் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும். புதியவர்களது தொடர்பால் பயன் பெறுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் மனத்துணிவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 25, 27, 28.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. 

எண்கள்: 4, 5, 6.

கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் கேதுவும் 5-ல் குருவும் உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி கூடும். பெண்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு கூடும். பெற்றோரிடம் அன்பும் பாசமும் அதிகமாகும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் கூடும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் புகழ் பெறுவார்கள். பணவரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 8-ல் வக்கிர செவ்வாயும், 9-ல் வக்கிர சனியும் ராகுவும் இருப்பதால் சகோதர நலனிலும் தந்தை நலனிலும் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பொருள்வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப். 25, 27, 28.

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 7.

 

 

மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பாகும். சுபச் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அன்றாடப் பணிகள் சீராகவே நடந்துவரும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது அவசியமாகும். கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும். மன உற்சாகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். சினிமா, நாடகம், நாட்டியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 27, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு..

எண்கள்: 5, 6.

Leave a Reply