வார ராசிபலன். 18.05.2014 முதல் 24.05.2014 வரை

5abஅயராத உழைப்பினால், அதிர்ஷ்ட தேவதையின் அருள் பெறுகின்ற மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன, சப்தம ஸ்தான அதிபதி சுக்கிரன் நற்பலன் வழங்குகின்றனர். மனம், செயலில் உறுதி இருக்கும். உழைப்பினால் அதிக பணம் சம்பாதிக்கிற வாய்ப்புக்களை, தவறாமல் பயன்படுத்துவீர்கள். சுய அந்தஸ்து பாதுகாக்க, பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். பொது இடங்களில் உங்கள் சொல்லுக்கு, கூடுதல் மரியாதை கிடைக்கும்.வாகன பயன்பாடு, சராசரி அளவில் இருக்கும். புத்திரர் உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். எதிர்ப்பாளரை சமயோசிதமாக வெற்றிக் கொள்வீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனமகிழ்ச்சி தரும். தொழில் வளர, தேவையான பணி புரிவீர்கள். பணியாளர்களுக்கு வேலையில் கவனம் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமை பாதுகாத்திடுவர். மாணவர்கள், பொது அறிவு செய்திகளில் ஆர்வம் கொள்வர்.

 

இனிய வார்த்தை பேசி, பிறரை வசீகரிக்கும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ஆதாய ஸ்தானத்தில் உச்சபலத்துடன் உள்ளார். குரு சனி, ராகு கூடுதல் நற்பலன் வழங்குகின்றனர். சமூகத்தில் கிடைத்த செல்வாக்கை அக்கறையுடன் பாதுகாத்துடுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி, முழு அளவில் கிடைக்கும். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால், பயணம் சவுகரியமாக அமைந்திடும்.புத்திரர் சிறு விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். பிணி, தொந்தரவு அணுகாத ஆரோக்கிய உடல்நலம் பெறுவீர்கள். இல்லறத்துணை உறுதுணையாக நடந்து கொள்வார். தொழிலில் அபிவிருத்தி பணி செய்து உற்பத்தி, விற்பனையில் திருப்திகரமான இலக்கை அடைவீர்கள். பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு, உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள், பண வசதிக்கேற்ப வீட்டு அலங்காரப் பொருள் வாங்குவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நலம் தரும்.

சந்திராஷ்டமம்: 18.5.14 இரவு 12:10 மணி முதல் 19.5.14 காலை 8:18.மணி வரை

 

சமூக நிகழ்வுகளை, அனுபவமாக ஏற்று செயல்படும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் கேது, சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். செயல்களில் ஒருமுகத்தன்மையுடன் ஈடுபடுவதால் மட்டுமே, ஓரளவு நன்மை கிடைக்கும். பொது விவாதங்களில் கருத்து சொல்ல வேண்டாம். இளைய சகோதரர் வகையில், எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம்.புத்திரர் ஆடம்பர பொருள் வாங்குவதில், ஆர்வம் கொள்வர். காலமுறை உணவுப்பழக்கம், சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும். இல்லறத்துணையின் மனக்கஷ்டம், சரியாக ஆறுதல்வார்த்தை சொல்வது உரிய பலன் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க, கூடுதல் முயற்சி தேவைப்படும். பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதல் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், நகை இரவல் கொடுக்க வாங்க கூடாது. மாணவர்கள், நண்பர்களிடம் பேசுவதில் நிதானம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 19.5.14 காலை 8:19 மணி முதல் 21.5.14 காலை 10:39 மணி வரை.

 

தன்னைச் சார்ந்தவர்களுக்கு, நல்ல ஆலோசனை வழங்கும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் மூன்றாம் இடத்தில் உள்ள செவ்வாய், பாக்ய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், புதன் வியத்தகு நற்பலன் வழங்குகின்றனர். இஷ்ட தெய்வ அருளுடன், முருகப்பெருமானின் நல்லருள் பலமும் துணை நிற்கும். புத்தி சாதுர்யத்தினால் வாழ்வில் புதிய முன்னேற்றப்பாதையை அறிவீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். சிலர் புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர் உங்கள் சொல்படி நடந்து, பெருமை சேர்ப்பர். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், உதவிகரமாக செயல்படுவர். தொழில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் பணியாளர்களை ஊக்கப்படுத்தி உற்பத்தி இலக்கை அடைவர். பெண்கள் குடும்பநலன் பேணுவதில், அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள் வெகுநாள் வாங்க விரும்பிய பொருளை, பெற்றோர் வாங்கித்தருவர்.

சந்திராஷ்டமம்: 21.5.14 காலை 10:40மணி முதல் 23.5.14 மதியம் 1:28 மணி வரை

 

மனசாட்சி தரும் கட்டளையை பெரிதும் மதிக்கின்ற, சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய வகையில், நற்பலன் வழங்குகின்றனர். பசு, பால் பாக்ய யோகத்தினால், பலவித நன்மையும் வந்து சேரும். மனதில் உற்சாகமும், செயல்களில், புதிய பரிமளிப்பும் உருவாகும். தம்பி, தங்கையின் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடத்த அனுகூலம் வளரும். வாகன பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரர் அறிவுத்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உங்கள் வாழ்வினர் சிறப்பு கண்டு, எதிரி வியப்புடன் விலகுவார். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் உறுதுணையாக நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பணவரவில், சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர்கள், விசுவாசம் நிறைந்த பணிக்காக பாராட்டு பெறுவர். பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதியுடன், மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள் கவனமுடன் பயன்படுத்தவும்.

சந்திராஷ்டமம்: 23.5.14 மதியம் 1:29 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

 

சிறிய நன்மையும் பெரிதென போற்றுகின்ற, கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே, ஓரளவு நற்பலன் வழங்குகிறார். மற்ற கிரகங்கள், எதிர்மறை பலன் தரும் இடங்களில் உள்ளனர். உங்களை ஏளனமாக பேசுபவரிடம் விலகுவதால், நற்பெயரை பாதுகாக்கலாம். செயல் நிறைவேற புதிய முயற்சி தேவைப்படும். கண்களின் பாதுகாப்பில், உரிய கவனம் வேண்டும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, நல்வழியில் நடத்துவது அவசியம். பணக்கடனால் உருவாகிற நெருக்குதல் சரி செய்ய, மனைவி வழி உறவினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் கிடைத்த அனுகூலம் பாதுகாக்க கூடுதல் பொறுப்புணர்வு பின்பற்ற வேண்டும். பணியாளர்கள், பணியிடத்தில் சச்சரவு பேசக்கூடாது. பெண்கள் குடும்பத்தில் உருவாகிற சிரம சூழ்நிலை மாற்றும் வகையில் செயல்புரிவர். மாணவர்கள், அறிவார்ந்தவர்களின் சொல்படி நடப்பதால் நன்மை பெறலாம்.

 

நேர்மை வழியில் மன உறுதியுடன் செயல்படும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் புதன், ஒன்பதாம் இடத்தில், குரு பகவான் அனுகூல அமர்வில் உள்ளனர். குடும்பத்தினரிடம் உருவான மகிழ்ச்சி மென்மேலும் வளர அனுகூலம் ஏற்படும். பணவரவு அதிகம் பெற உதவுகின்ற புதிய வழிமுறை ஆராய்வீர்கள். இளைய சகோதரர் சொல்லும் வார்த்தையை வேதம் என கருதுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் ஆடம்பரமாக செயலாற்றுவதில் ஆர்வம் கொள்வர். உங்கள் நற்செயலின் தாக்கம் எதிரியின் மனதில் நல்மாற்றம் உருவாக்கும். இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க மேற்கொண்ட பணிகளுக்கு நன்றி சொல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பொறுமையுடன், சில மாற்றம்செய்வதால் வளர்ச்சியும், பணவரவும் கூடும். பணியாளர்கள், பணித்திறன் நன்கு பயன்படுத்தி திட்டமிட்டஇலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளை கனிவுடன் கேட்டு செயல்படுவர். மாணவர்கள், நண்பரின் செயல்குறையை பொறுப்பது நட்பு வளர உதவும்.

 

பகைவரின் திட்டம் சமயோசிதமாக முறியடிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், கேது, செவ்வாய் செயல்படுகின்றனர். உங்கள் நலம் விரும்புபவரின் வாழ்த்து, உதவி கிடைத்து மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தேவை நிறைவேற்ற தாராள பணவசதி துணை நிற்கும். இளைய சகோதரரின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்து, குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பீர்கள். வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். மகளின் ஜாதக யோக பலம் புதிய சொத்து வாங்க அனுகூலம் தரும். எதிர்ப்பாளர் உங்கள் வாழ்வின் சிறப்பு உணர்ந்து வியப்புடன் விலகுவர். இல்லறத்துணை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ முழு அளவில் அக்கறை கொள்வர். தொழில், வியாபாரத்ததல் உருவாகிற குறையை தாமதமின்றி சரி செய்து, தகுந்த நன்மை பெறுவீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் கருத்துடன் பின்பற்றுவர். குடும்ப பெண்கள், வளமான வாழ்வுதந்த இஷ்ட தெய்வத்திற்கு வழிபாடு நடத்துவர். மாணவர்கள், தாயின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வர்.

 

பிறரது கருத்தை மதித்து, தன் அன்பை வளர்த்திடும் தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் செவ்வாய், கேது தவிர, மற்ற கிரகங்கள், வியத்தகு அளவில் நற்பலன் தருகின்றனர். பல நாள் மனதில் உதித்த திட்டம், செயல் வடிவம் பெறும். புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு, மங்கல நிகழ்ச்சி நடத்த, சாதகமான சூழல் உருவாகும். சிலர் வீடு, வாகனம் புதிதாக வாங்க நல்யோகம் உண்டு.புத்திரர் ஆன்மிக விஷயங்களில், தேவையான விளக்கம் பெற உங்களை அணுகுவர். வழக்கு, விவகாரத்தில் சுமுகத்தீர்வு கிடைக்கும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைத்து, வளர்ச்சியை உருவாக்கும். பணியாளர்கள், அதிக வேலை வாய்ப்பு, திருப்தி கர அளவில் பணவரவு பெறுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவுவர். மாணவர்கள், நண்பர்களிடம் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள்வர்.

 

சத்திய குணம், முழு மனதுடன் பின்பற்றுகின்ற மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் தருகின்றனர். மனமகிழ்ச்சியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் இனிய அணுகுமுறை பார்த்து, பொறாமை குணம் உள்ளவர் இடையூறு செய்வர். குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள ஒற்றுமை, குறைவுபடாத வகையில், பொறுமை குணம் பின்பற்ற வேண்டும். நண்பருடன் வாகனத்தில் மிதவேகம் நல்லது.புத்திரரின் விளையாட்டு குணம் நிறைந்த செயலை, இதம்பதமாக அறிவுரை சொல்லி மாற்றுவீர்கள். அளவான உழைப்பு, சீரான ஓய்வு, உடல் நலத்தை பாதுகாக்கும். இல்லறத்துணை, உங்களின் மனக்கவலையை மாற்றுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதியநுட்பம் பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள் பெற வேண்டிய சலுகை, எளிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.

 

அடுத்தவர் நலம் காக்க, இயன்ற வகையில் உதவும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய இடங்கள் முறையே சுக்கிரன், கேது, புதன், குரு அனுகூல அமர்வில் உள்ளனர். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசி நண்பர், உறவினரிடம் நற்பெயர் பெறுவீர்கள். பணவசதி திருப்திகர அளவில் இருக்கும். ஆன்மிக நம்பிக்கை வளர்ந்து வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். உறவினர் வருகை, வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.புத்திரர் புதிய கலைகள் கற்பதில், ஆர்வமுடன் ஈடுபடுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையிலான உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. இல்லறத்துணை, உங்களின் கருத்துகளை ஏற்று நடப்பார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணியாளர்கள், தனக்கான கடமை உணர்ந்து பணிபுரிவர். குடும்ப பெண்கள், தாராள பணவசதி, கணவரின் அன்பு கிடைத்து, சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், காலமுறை உணவுப்பழக்கம் பின்பற்றுவதால், உடல்நலம் ஆரோக்கியமாகும்.

 

மன்னிக்கும் மனப்பாங்கை, உறுதியாக பின்பற்றும் மீனராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசியில் சுக்கிரன், மூன்றாம் இடமான தைரியம், புகழ் ஸ்தானத்தில் சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். முகத்தில் சந்தோஷத்தின் வெளிப்பாடு பிரகாசமாக இருக்கும். புதிய முயற்சியை, தகுந்த திட்டமிடுதலுடன் துவங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகி, வாழ்வில் ஒளிமயமான பாதையைத் தரும். வீட்டிற்கு வரும் உறவினர்களை பரிவுடன் உபசரிப்பதால் அன்பு வளரும்.புத்திரர் நல்லவிதமாக நடந்து, பெருமை தேடித்தருவர். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை, ஒற்றுமை மனதுடன் வேண்டிய உதவி வழங்குவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றுவதால், வளர்ச்சி நிலை உருவாகும். பணியாளர்கள், பணியிடத்தில் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். குடும்ப பெண்கள், சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள், பாடம் கற்பித்த ஆசிரியரின் நல்ல குணம் எண்ணி மகிழ்வர்.

Leave a Reply