முயற்சி வெற்றி பெற தகுந்த பணியாற்றும் மேஷ ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், செவ்வாய் திருப்திகர அளவில் நற்பலன் வழங்குகின்றனர்.தர்ம சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முகத்தில் வசீகரமும், செயலில் திறமையும் இருக்கும். அக்கம் பக்கத்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர்.வாகன பயன்பாடு அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரர் புதிய விஷயங்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வர். பூர்வ சொத்தில் பணவரவு கூடும் நண்பரின் உதவி கிடைக்கும்.இல்லறத்துணை குடும்ப நலனில் உரிய அக்கறையுடன் நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரமங்களை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். அரசுப் பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு சலுகை பெறுவர். குடும்ப பெண்கள் பணவசதிக்கேற்ப வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் நண்பரின் குறையை விமர்சிக்க வேண்டாம்.
பரிகாரம்: ஹயக்ரீவரை வழிபடுவதுடன், ஏழை மாணவரின் படிப்புக்கு உதவலாம்.
புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் நிறைந்தரிஷப ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி, ராகு, சுக்கிரன் நற்பலன் வழங்குகின்றனர். உறவினர்களிடம் குடும்ப விவகாரம் பேசுவதால் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். கவனம் தேவை. வீட்டுத் தேவைகளுக்கான பணச்செலவு கூடும். பொது இடங்களில் நடக்கும் விவகாரங்களை அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம். வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால் பயணமுறை எளிதாகும். புத்திரரின் செயல்களை கண்காணித்து வழிநடத்துவது நல்லது.வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணத்தை மனதார பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள், குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றி, பாராட்டு வெகுமதி பெறுவர்.பெண்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கியத்துவம் தருவர். மாணவர்கள் கண்களுக்கு தகுந்த பயிற்சியும், ஓய்வும் தருவது நல்லது.
சந்திராஷ்டமம்:14.6.14 நள்ளிரவு 12:01மணி முதல்15.6.14 மாலை 4:52 மணி வரை
பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபடுவதுடன், சுமங்கலி பெண்ணுக்கு வஸ்திரம் வழங்கலாம்.
அறிவும், செயல்திறனும் இருகண்கள் என, போற்றும் மிதுன ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சுக்கிரன், கேது அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். புதிய வரவாக குருபகவானும் பெயர்ச்சியாகி இரண்டாம் இடத்தில் உச்ச பலத்துடன் உள்ளார். கடந்த நாட்களில் வரவேண்டிய பணம் கிடைத்து மகிழ்வீர்கள். உங்கள் சொல்லுக்கு நண்பர், உறவினர் உரிய மதிப்பு, மரியாதை தருவர். இளைய சகோதரருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்க பிடிவாத குணத்துடன் அணுகுவர். எதிர்மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவது நல்லது.இல்லறத்துணை தெய்வ வழிபாட்டில் கூடுதல் நம்பிக்கை கொள்வார். தொழிலில் வியத்தகு வளர்ச்சியும், திருப்திகர அளவில் பணவரவும் கிடைக்கும். பணியாளர், பணித்திறன் வளர்த்து எளிதாக பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் பணவசதிக்கேற்ப புத்தாடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.
சந்திராஷ்டமம்: 15.6.14 மாலை 4:53 மணி முதல் 17.6.14 இரவு 8:27மணி வரை
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், மோதகம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.
செயலின் பின் விளைவு உணர்ந்து நடக்கும்கடக ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய், லாபஸ்தானத்தில் புதன் அனுகூலமாக உள்ளனர்.முக்கியமான செயல்கள் நிறைவேற முருகப்பெருமானின் நல்லருள் துணை நிற்கும். மனம், செயலில் உத்வேகம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களின் நற்குணம் உணர்ந்து கொள்வர். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.பிணி ஸ்தானத்தில் சனி, செவ்வாயின் பார்வை பதிவதால் உடல்நலத்திற்காக, சிறு அளவிலான அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணையிடம் கருத்து வேறுபாடு வராத அளவில் பேசுவது நல்லது.தொழில் வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். பெண்கள் நகை, இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருள்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
சந்திராஷ்டமம்: 17.6.14 இரவு 8:28மணி முதல்19.6.14 இரவு 9:32 மணி வரை
பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபடுவதுடன், வயோதிக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.
தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வு வளம் பெற உதவும், சிம்ம ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, செவ்வாய், கேது தவிர, மற்ற கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். உடல் நல ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து, பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். எவரிடமும் நிதானித்து பேசி, நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். பசு, பால் பாக்ய யோகத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வ வளமும் அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் கவனக்குறைவான செயலால், சிறு அளவில் சிரமம் எதிர்கொள்வர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினரால் உதவி உண்டு. தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்களுக்கு தாமதமான சலுகை எளிய முயற்சியால் வந்து சேரும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நல் அன்பை பெறுவர். மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 19.6.14 இரவு 9:33மணி முதல் 21.6.14 இரவு 1:33 மணி வரை.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு வழங்கலாம்.
உழைப்பே உயர்வு தரும் என்ற மன உறுதியுள்ள, கன்னி ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், குரு தாராளமாக நற்பலன் வழங்குகின்றனர். மன உறுதியுடன் செயல்படுவதால், முழு அளவில் நன்மை கிடைக்கும். வீண் பேச்சு பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தம்பி, தங்கைக்கு சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சி கை கூடும். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாடு கிடைக்க, சில மாற்றம் செய்வீர்கள். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவு அதிகரிக்கும். புத்திரர் உத்வேக செயலால், தன் திறமையை வளர்த்துக் கொள்வர். உடல் நல ஆரோக்கியம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை, உங்களின் மனக்கவலை குறைய ஆதரவாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி, தகுந்த பலன் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, பிற சலுகை கிடைக்க யோகம் உண்டு. பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளை அறிந்து பணி மேற்கொள்வர். மாணவர்கள், நண்பருடன் வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், நண்பரின் கஷ்டம் தீர உதவலாம்.
தன் தகுதி, திறமையை வெளிப்படுத்த துணிவுடன் செயல்படும் துலாம் ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள, புதன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். கடந்த காலத்தில், உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்களை, பொது இடங்களில் எதிர்கொள்ள நேரிடலாம். அவர்களிடம் விலகுவதால், மன அமைதியை பாதுகாக்கலாம்.புதிய பணிகளை, சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து துவங்குவது நல்லது. குடும்ப தேவைகளுக்கான பணச் செலவு அதிகரிக்கும். புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். வெகுநாள் தீர்வு பெறாத விஷயத்தில், சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத்துணையின் மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள், உடல்நலம் பேணுவதால், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்கிற மனநிலை உருவாகும். பெண்கள், சிறு செலவுகளை சேமிப்பு பணத்தில் மேற்கொள்வர். மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர, பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு கலந்த பாயசம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்
நண்பரின் நல்ல ஆலோசனையை மதித்து செயல்படும், விருச்சிக ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, குரு, செவ்வாய் அனுகூல பலன் வழங்குகின்றனர். ஆன்மிக நம்பிக்கையும், பணிகளில் ஈடுபாடு வளரும். உபரி பணவரவு கிடைத்து, குடும்ப செலவை தாராள அளவில் மேற்கொள்வீர்கள். எவரிடமும் நிதானித்து பேசி, நல்அன்பை பெறுவீர்கள். தாயின் அன்பும், ஆசியும் மனதில் ஊக்கம் தரும். புத்திரர் தன்னுடைய கடமைகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். உடல்நல ஆரோக்கியம் சீராகும். இல்லறத்துணையின் கவனக்குறைவான செயல், சிரமம் உருவாக்கலாம். தொழிலில் புதியவர்களின் அறிமுகம் உற்பத்தி, விற்பனை அளவை அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் அக்கறையுடன் பின்பற்றுவர். குடும்ப பெண்கள், கணவரின் சம்மதமின்றி, எவருக்கும் பண பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
பரிகாரம்: சித்தர்களின் அருள் ஸ்தலத்தில் வழிபடுவதுடன், அன்னதான நற்பணிக்கு உதவலாம்.
எண்ணம், செயலால் சமூகத்தில் நற்பெயர் பெறும் தனுசு ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், சனி, ராகுவின் அமர்வு சிறப்பாக உள்ளது. கடந்த நாட்களில் உருவான சிரமம், புதிய முயற்சியால் சரி செய்வீர்கள். பெண் தெய்வ அருளும், மகளின் ஜாதக யோகமும் துணை நின்று உதவும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். வாகன பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரர் கவனக்குறைவால், தன் லட்சியம் நிறைவேற்றுவதில் தாமதம் உருவாகும். உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பணிமேற்கொள்வர். மாணவர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதுடன் எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.
தீதும், நன்றும் பிறர்தர வாரா, என நம்புகின்ற, மகர ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன் அளப்பரிய நற்பலன் வழங்குகின்றனர். குருபகவான் பெயர்ச்சியாகி, புதிய வரவாக கூடுதல் நல்லருள் வழங்குகிறார். குறிப்பிட்ட விஷயத்தில், மனதில் இருந்த சஞ்சலம் தீர, புதிய வழி பிறக்கும். பழகுபவர்களிடம் உற்சாகமாக பேசுவீர்கள். உறவினர் உறுதுணையாக செயல்படுவர். வீடு, வாகனத்தில் அதிக பயன்பாட்டு வசதி பெற, தேவையான மாற்றம் செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருள், அதிக தரத்துடன் வாங்கித் தருவீர்கள். எதிரியால் தொந்தரவு அணுகாத சுமுக வாழ்வு இருக்கும். இல்லறத்துணை, உங்களின் அந்தஸ்து மேம்பட, உரிய வழிவகை சொல்வார். தொழில், வியாபாரத்தில், புதியவர்களின் தொடர்பு வளர்ச்சியை உருவாக்கும். பணியாளர்கள், நிம்மதி நிறைந்த மனதுடன் பணியில் ஈடுபடுவர். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குவர்.
பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன் பசுவுக்கு, ஊறவைத்த பச்சரிசி வெல்லம் கலந்து வழங்கலாம்.
சத்திய வழியில் மன உறுதியுடன் நடைபோடும், கும்ப ராசிக்காரர்களே!
இந்தவாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன், கேது நான்காம் இடத்தில் புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக செயல்படுகின்றனர். நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பணியை, தெய்வ நம்பிக்கையுடன் துவங்குவீர்கள். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பொதுப் பிரச்னைகளில் கருத்துசொல்ல வேண்டாம். இளைய சகோதரரின் சிரமம் சரிசெய்ய உதவுவீர்கள். வெளியூர் பயணம், புதிய அனுபவம் பெற்றுத்தரும். புத்திரரின் உடல்நலம் பேணுவதில் கூடுதல் அக்கறை வேண்டும். பணக்கடன் தொந்தரவு சரி செய்வதால் மட்டுமே, மனம் உற்சாகம் பெறும். இல்லறத்துணை பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறையை பின்பற்றுவீர்கள். பணியாளர்கள், பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர். பெண்கள், ஆரோக்கிய உடல்நலம் அமைந்து குடும்ப பணிகளில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள், ஆசிரியரின் வழி காட்டுதலை ஏற்று செயல்படுவர்.
பரிகாரம்: உடைத்த தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனீஸ்வரர் சன்னிதியில் வைத்து வழிபடவும்.
வாக்குறுதி தருவதில் நிதானித்து செயல்படும், மீன ராசிக்காரர்களே!
இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் ஐந்தாம் இடத்தில் புதிய வரவாக குருவின் அனுகூல அமர்வு உள்ளது. அஷ்டமச்சனியின் காரணமாக, கடந்த காலத்தில் உருவான கஷ்டங்களுக்கு, புதிய விடிவு காலம் பிறந்துள்ளது. மன உறுதியுடன் செயல்பட்டு, பெற வேண்டிய நன்மையை முழு அளவில் பெறுவீர்கள். உங்களை தேவையின்றி, புகழ்ந்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் வேதசாஸ்திரங்களின் மகிமை உணர்ந்து கொள்ள உதவுவீர்கள். சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை ஒருமுகத்தன்மையுடன் உதவிகரமாக செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு, சமயோசிதமாக சரி செய்வது நல்லது. பணியாளர்கள், சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் பேசவேண்டாம். குடும்ப பெண்கள், சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன் கொண்டக்கடலை தானம் வழங்கலாம்.