வார ராசிபலன். 03.08.2014 முதல் 09.08.2014 வரை

weeklyதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, பணியை நிறைவேற்றும் மேஷம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் புதன், ஆறாம் இடத்தில் ராகு அனுகூலமாக உள்ளனர்.
சுக்கிரன் மூன்று, நான்காம் வீடுகளில் இடம் பெற்று குடும்ப வளத்திற்கு தேவையான நன்மை வழங்குகிறார். பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். புத்திரரின் உத்வேக செயல்களை ஒழுங்குபடுத்துவது நல்லது. எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். இல்லறத்துணை உங்களின் சிறந்த குணம் பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் அன்பு திருப்திகர பணவசதி பெறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற சில வழிகாட்டுதல் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 4.8.14 நள்ளிரவு 1:13 மணி முதல் 6.8.14 அதிகாலை 4:51மணி வரை.

பரிகாரம்: பூஜை அறையில், கோமாதாவின் உடலில், மூவர், தேவர், முனிவர்கள் இடம் பெற்ற படம் வைத்து வழிபடுவதுடன், ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கலாம்.

 

கருணை மனதுடன் நல்லவர்க்கு உதவுகின்ற ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், குரு, ராகு தவிர மற்ற கிரகங்கள் தாராள அளவில் நற்பலன் தருவர்.
பல நாள் நினைத்த திட்டத்தை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். பேசும் வார்த்தை பழகுபவரிடம் உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான பணச்சேமிப்பு கூடும்.புத்திரர் தம் நண்பர்களிடம் உருவான கருத்து வேறுபாடு விலக ஆலோசனை சொல்வீர்கள். இல்லறத்துணை, உங்கள் சொல்லை வேதம் என, கருதுவார். தொழிலில் அபிவிருத்தி பணி செய்து, உற்பத்தி விற்பனையில் முன்னேற்றம் காண்பீர்கள். இல்லறத்துணை குடும்பநலனுக்காக அக்கறையுடன் செயல்படுவார்.மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து கூடுதல் தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்:7.8.14அதிகாலை 4:52மணி முதல் 9.8.14 காலை 9:08 மணி வரை.

பரிகாரம்: மேற்கு திசை பார்த்து ஓம் வருணாய நமஹஎன, வழிபடுவதுடன் சகோதரி விரும்பிய பொருள் வாங்கித் தரலாம்.

 

பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு அதிக நன்மை பெறும் மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, சந்திரன் நற்பலன்களை தாராள அளவில் தருவர். நடை, உடை, செயலில் வசீகர மாற்றம் பின்பற்ற மனம் விரும்பும், பொறாமை குணத்துடன் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது.அத்தியாவசிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெற வேண்டியிருக்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்.புத்திரரின் விளையாட்டுத்தனமான செயல்களை பொறுமையுடன் சரி செய்வீர்கள். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் உருவாகிற முன்னேறத்திற்கு நன்றி சொல்கிற வகையில் தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்கள் ஓய்வு நேரத்தை உபயோகமாக பயன்படுத்துவர். மாணவர்கள், கண்களின் பாதுகாப்பில் கவனம் பின்பற்றவும்.

சந்திராஷ்டமம்:
9.8.14 காலை 9:09மணி முதல் அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன், கற்கண்டு, ஏலக்காய் கலந்த பால் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

 

பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு, சுக்கிரன் நற்பலன் தருவர். உறவினர்களிடம் பெற்ற நற்பெயரை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை வேண்டும். பொது இடங்களில் எவருடனும் விவாதம் செய்ய வேண்டாம். உடன் பிறந்தவர் கூடுதல் அன்பு, பாசம் மேற்கொள்வர். வீடு வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர், விரும்பிய பொருள் வாங்குவதில் பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர்.சேமிப்பு பணம் செலவாகும். இல்லறத்துணை சொல்கிற ஆறுதல் வார்த்தை ஊக்கம் தரும்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் குடும்ப பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர்.மாணவர்கள் விஷமக்கருத்து பேசுபவர்களிடம் விலகுவது நல்லது.

பரிகாரம்:
பூஜையறையில் வடக்கு திசை நேோக்கி அமர்ந்து, தட்சிணாமூர்த்தியை தியானித்து, குருமந்திரம் சொல்லி வழிபடுவதுடன், வயோதிகர்களுக்கு உதவலாம்.

 

எண்ணத்திலும், செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய், சுக்கிரன் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். இதமான பேச்சு, அணுகுமுறையால் புதியவர்களின் அன்பு, நட்பு பெறுவீர்கள். இளைய சகோதரர் உறுதுணையாக நடந்து கொள்வார். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். பூர்வ சொத்து பராமரிப்பில் நம்பகமானவரை பணியமர்த்துவது நல்லது. சத்து நிறைந்த உணவு சாப்பிட்டு உடல்நலத்தை மேம்படுத்துவீர்கள். இல்லறத்துணையின் சாதகயோக பலம் குடும்பத்தில் மங்கல நிகழ்வை உருவாக்கும். தொழில்,வளர்ச்சி பெற தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர். குடும்ப பெண்கள், பண வசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் கல்வி பயில்வர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடை மாலை சாற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.

 

குடும்ப உறுப்பினர்களிடம் கூடுதல் பாசமுள்ள கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சூரியன், புதன், புத ஆதித்ய யோகம் தரும் வகையில் உள்ளனர். அதே இடத்தில் உச்சம் பெற்ற குருவின் அமர்வு அனுகூலமாக உள்ளது. எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகம், அன்பு, உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் சில மாற்றம் செய்வீர்கள். புத்திரரின் கவனக்குறைவை சரி செய்வது நன்மை பெற உதவும். எதிரி கெடுதல் செய்ய உரிய தருணம் எதிர்பார்த்து காத்திருப்பார்; கவனம் தேவை. இல்லறத்துணை குடும்பத்தின் சிரமத்தை தாமதமாக உணருவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், தாய் வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள், ஆசிரியரின் வழி காட்டுதலை பின்பற்றி படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், ஏழையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவலாம்.

 

நடை, உடை செயலில் வசீகரம் நிறைந்த துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன் பத்தாம் இடத்திலும், கேது ஆறாம் இடத்திலும் அனுகூலமாக உள்ளனர். சுக்கிரன், வாரத்தின் முதல் நான்கு நாட்கள் சிறப்பான பலன் தருவார். மனதில் உத்வேகமும், செயலில் பரிமளிப்பும் உருவாகும். நண்பரால் உதவி உண்டு. பணப்பரிவர்த்தனையில் நிதானம், பாதுகாப்பு முறை பின்பற்றவும். தாயின் தேவையை நிறைவேற்றுவதால், குடும்ப ஒற்றுமை வளரும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். இல்லறத்துணையின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். தொழில், வியாபாரம் செழிக்க, நடத்துகிற முயற்சி வெற்றியாகும். பணியாளர், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நற்பெயர், வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களால் நல்ல மாற்றம் கொண்டு வருவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: நாக தேவதையை வழிபடுவதுடன், கன்னிப் பெண்ணுக்கு மங்கலப் பொருட்கள் தானம் கொடுப்பதால், குடும்பத்தில் சுபீட்சம் ஏற்படும்.

 

தகுதி மீறிய வாக்குறுதியை தவிர்த்திடும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, ராகுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. நிலுவைப் பணிகளை புதிய முயற்சியினால் நிறைவேற்றுவீர்கள். நல்ல வார்த்தையின் மகத்துவத்தை அனுபவத்தில் உணருவீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். புத்திரரின் ஞானம் நிறைந்த சிந்தனை உரிய தருணங்களில் நல்ல வரவேற்பு தரும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால், பணி இலக்கு எளிதாக நிறைவேறும். பெண்கள், பணவரவுக்கேற்ப செலவு மேற்கொள்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதுடன், சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

 

மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி, கூடுதல் நன்மை பெறும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், சனி, செவ்வாய் அளப்பரிய வகையில் நற்பலன் தருகின்றனர். தாமதமான செயலில், புதிய திருப்பம் ஏற்படும். நிதானித்து பேசுவதால், அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். இளைய சகோதரர் உறுதுணையாக நடந்து கொள்வார். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரரின் தேவையை, தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். எதிரியால் வரும் சிரமத்தை, மாற்று உபாயத்தால் சரி செய்வது நல்லது. இல்லறத்துணையின் மனதில், உங்கள் மீதான நம்பிக்கையில் குறை வராமல் நடந்து கொள்ளவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கிடைக்கிற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், நம்பிக்கையுடன் படித்து கூடுதல் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், சிவனடியார்க்கு புத்தாடை தானம் வழங்கலாம்.

 

வெளிப்படையாக பேசுவதில், தயக்கம் உள்ள மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, உச்சம் பெற்ற குருவில் அமர்வு சிறப்பாக உள்ளது. ஆன்மிக நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். புதியவர்களிடம் பழகுவதில், சமயோசித குணம் பின்பற்ற வேண்டும். வாகன ஸ்தானத்தில் சனி, செவ்வாய் பார்வை பதிவதால், மிதவேகம் நல்லது. புத்திரர் செயல் நிறைவேற தாமதம் ஆவதால், மனவருத்தம் அடைவர். சத்தான உணவுப்பழக்கம், சீரான ஓய்வு, உடல்நலம் காக்கும். இல்லறத்துணையின் செயல்குறையை பெரிதாக எண்ண வேண்டாம். தொழிலில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற நடைமுறை நன்மை தரும். பணியாளர், கூடுதல் பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நல்லது. பெண்கள், நகை பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்:
பைரவரை வழிபடுவதுடன், பச்சரிசி, வெல்லம், பாசிப்பயறு கலந்த பாயாசம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

 

தன்னிடம் பழகுபவர்களுக்கு, உரிய மரியாதை தரும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குருவின் அமர்வு சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளது. அஷ்டமச் சனியுடன் செவ்வாய் உள்ளதால், எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடவேண்டும். குருவின் பார்வை ராசியில் உள்ளதால், சான்றோரின் ஆசி, மனதில் ஊக்கம் தரும். பணவரவை உணர்ந்து, செலவு மேற்கொள்ளவும். உறவினர்களின் வருகை, வீட்டில் மகிழ்ச்சியை உருவாக்கும். புத்திரர் அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவர். எதிரியிடம் விலகுவதால், பொன்னான நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர் இலகுவாக பணி மேற்கொள்வர். பெண்கள், உறவினர் கடந்தகால அவதுாறு பேச்சை மன்னித்து, அன்பு பாராட்டுவீர்கள். மாணவர்கள், பெற்றோரின் சொல் கேட்பது, சில நன்மை பெற உதவும்.

சந்திராஷ்டமம்: 2.8.14 நள்ளிரவு 12:01 மணி முதல் 4.8.14 நள்ளிரவு 1:12 மணி வரை.

பரிகாரம்:
சனி பகவானை வழிபடுவதுடன், நியாயம், தர்மம் ஆகிய நற்குணம் பின்பற்றுவதால், பல நலமும் கிடைக்கும்.

Leave a Reply