வார ராசிபலன். 20.10.2014 முதல் 26.10.2014

vara rasipalanஅடுத்தவரின் நற்செயலை மனதார பாராட்டும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் புதன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். பேசும் வார்த்தையில் நிதானம், நற்பெயர் பாதுகாக்க உதவும். அக்கம் பக்கத்தவரிடம் பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். உடன் பிறந்தவர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும்.புத்திரரின் தாழ்வு மனப்பான்மை நீங்கிட, நல்ல அறிவுரை சொல்வீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். இல்லறத் துணையின் கவனக் குறைவை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது சிரமம் தவிர்க்கும். மாணவர்கள், தன் கடமை உணர்ந்து படிப்பீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன், ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கலாம்.

மனதை புத்துணர்வுடன் வைத்து செயலில் வெற்றி பெறும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் சூரியன், சனி, கேது நற்பலன் தருவர். குடும்பத்தின் தேவை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும், மாறுபட்ட சமூக நிகழ்வு மனதில் சங்கடம் தரலாம். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். தாய் வழி உறவினர் உங்கள் அருமை, பெருமை நிறைந்த செயலை பாராட்டுவர்.புத்திரரின் கவனக் குறைவை இதம், பதமாக சரி செய்வது ஒற்றுமை வளர்க்கும். நிலுவைப் பணம் வசூலாகும். வாழ்வியல் நடைமுறை சுமுகமாகும். இல்லறத் துணையின் மனக்கஷ்டம் தீர உதவுவது நல்லது. தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் சிறந்து வர அனுகூலம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தை வழி சார்ந்த உறவினர்களுக்கு உதவலாம்.

தன் தகுதி, திறமை உணர்ந்து பணிபுரியும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் குரு, புதன், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. உங்களின் உண்மை, நேர்மை மிகுந்த பேச்சு. புதியவர்களை நண்பராக பெற்றுத் தரும். குடும்பத்தினரின் தேவை நிறைவேற்ற, தாராள பண வசதி துணை நிற்கும். சிலர், புதிய வாகனம், வீடு வாங்க நல்யோகம் உண்டு.புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும். நிலுவைப் பணம் வசூலிப்பதில் இதமான அணுகுமுறை நற்பலன் தரும். இல்லறத் துணை அன்பின் வடிவமாகி, தேவையான உதவி வழங்குவார். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறி, உபரி பண வரவு கிடைக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்வீர்கள். பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை அக்கறையுடன் பின்பற்றுவர்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவதுடன், கோவில் யானைக்கு பழம், வெல்லம் பாகனிடம் வழங்கலாம்.

எதிர்ப்புகளை உரிய வகையில் சரி செய்யும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் ராகு, சுக்கிரன், செவ்வாயின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. பசு, பால் பாக்ய யோகத்தினால் பலவித நன்மை பெறுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவதில் உரிய முன்யோசனை வேண்டும். வெளியூர் பயணம் புதிய அனுபவம் பெற்றுத் தரும். உறவினர் வருகை, வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.புத்திரர், சிரமங்களை வென்று தகுதி, திறமை வளர்த்திடுவர். எதிரியால் வரும் கெடு செயல், பலமிழந்து போகும். இல்லறத் துணை, உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய வாய்ப்பு வரும். பணியாளர்கள், கடமை உணர்ந்து செயல்பட்டு நற்பெயர், வெகுமதி பெறுவீர்கள். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், கொண்டக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்

புன்னகை முகபாவத்துடன் பணி மேற்கொள்ளும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் மூன்றாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன், சனி பகவான் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் மீது பொறாமை கொண்டவரிடம் விலகுவதால், மன அமைதி பாதுகாக்கலாம். பொது நலப் பணி புரிவதிலும் ஆர்வம் வளரும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும்.
புத்திரரின் கெடுபிடியான செயல்களை, பொறுமையுடன் சரி செய்வது நல்லது. பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத் துணை, நல்லவிதமான ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி முன்னேற்ற பாதையில் நடைபோடுவீர்கள்.
பணியாளர்கள், தொழில் நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க பாடுபடுவர். மாணவர்கள், படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் பேச வேண்டாம்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதுடன், நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவலாம்.

உலக நடப்புக்களை அறிவதில் ஆர்வமுள்ள, கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் ஆட்சி பெற்ற சுக்கிரன், உச்சம் பெற்ற குருபகவான் நற்பலன் தருவர். சுயகவுரவ சிந்தனை தவிர்ப்பதால் உறவினர், நண்பர்களிடம் நற்பெயர் பெறலாம். வார்த்தையின் வசீகரம், சிலரை பொறாமைப்பட வைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.புத்திரரின் சேர்க்கை, சகவாசம் அறிந்து நல்வழி நடத்துவது அவசியம்.எதிரியினால் வரும் சிரமத்தை சரி செய்ய, மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். இல்லறத் துணையின் அன்பும், பரிவும் நிறைவாக கிடைத்து மனதில் புதிய நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு உரிய பலன் பெற உதவும். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்பதால் பணத் தேவை பூர்த்தியாகும். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மகிழ்வீர்கள். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: சித்தர்களை வழிபடுவதுடன், சிவனடியார்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கலாம்.

சோதனையான நேரத்திலும் மன உறுதியுடன் பணிபுரியும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் சுக்கிரன், செவ்வாய், கேது நற்பலன் தருவர். ஆடம்பர எண்ணங்களை செயல்படுத்துவதால், பணத் தேவையின் அளவு அதிகரிக்கும். எதிர்மறையான செயல்களை வெல்லும் திறன் அறிவீர்கள். முருகப் பெருமானின் நல்லருள், பக்கபலமாக துணை நிற்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால், பயணம் எளிதாகும்.புத்திரர், தகுதி மீறிய செயலில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை சொல்லுங்கள். இல்லறத் துணை, உங்கள் எண்ணங்களை அறிந்து செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணியாளர்கள், பணியை இலகுவாக்க புதிய திட்டமிடுவீர்கள். பெண்கள், விதவிதமாக உணவு தயாரித்து குடும்ப உறுப்பினர்களை உபசரிப்பர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக் கூடாது.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதுடன், மிளகு, சீரகம் கலந்த வெண்பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதம் வழங்கலாம்.

நியாயமான சிந்தனைகளை மட்டுமே நிறைவேற்றும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் குரு, ராகு, புதன், சுக்கிரன் நற்பலன் வழங்குகின்றனர். மனதில் குழப்பம் விலகி, புதிய உத்வேகம் பிறக்கும். பணிகளை நேர்த்தியாக செய்வீர்கள். பண வரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.புத்திரரின் நற்செயல், பெருமை தேடித் தரும். சொத்து, ஆவணம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் வேண்டும். அறிமுகம் இல்லாதவர் உங்களை புகழ்ந்து பேசுவதை, கவனத்தில் கொள்ள வேண்டாம். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் சீர் பெற, சில மாற்றம் செய்வது அவசியமாகும். பணியாளர்கள், தன் கடமை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்கள், குடும்பத்தினர் நலன் பாதுகாப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்தவும்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதுடன், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

துணிந்த மனம் துன்பத்தை மாற்றும் என நம்பும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் புதன், சுக்கிரன், சூரியன், சனி நற்பலன் வழங்குகின்றனர். சிலர் மீது கொண்ட மனவருத்தம் தவிர்ப்பதால், பணிகள் சிறப்பாக நிறைவேற உத்வேகம் பிறக்கும். உழைப்பின் மூலம் பண வரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். சமூக நிகழ்வுகளின் தாக்கம் புதிய அனுபவம் தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும்.புத்திரரின் படிப்பு, செயல் சிறக்க உதவுவீர்கள். எதிரி, வியந்து விலகும் அனுகூலம் உண்டு. இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த உதவுவீர்கள். மாணவர்கள், புதியவர்களிடம் பழகுவதில் நிதானம் வேண்டும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், அவரின் பெயர் வைத்த ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கலாம்.

பிறருக்கு இயன்ற அளவில் உதவும் நல்மனம் உள்ள, மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் கேது, குரு, சூரியனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. வாழ்வில் குறுக்கிட்ட எதிர்ப்பு விலகி முன்னேற்றம் பெற புதிய வழி உருவாகும். நற்செயல்கள் முழு அளவில் நன்மை தரும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாட்டு வசதி பெற, சில மாற்றம் செய்வீர்கள்.புத்திரரின் செயல் குறையை சரி செய்வதில், இதமான அணுகுமுறை வேண்டும். எதிரியால் வரும் சிரமத்தை சரி செய்ய, கூடுதல் பணம் செலவாகும். இல்லறத் துணையின் கடந்த கால கெடுபிடி செயல் பற்றி விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் வருகை, நல்ல வளர்ச்சி தரும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 18.10.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 21.10.14 காலை 6:21 மணி வரை.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், தமிழை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம்.

உழைப்பு உயர்வு தரும் என்ற உணர்வுடன் பணியாற்றும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆதாய பலன் வழங்குவர். மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தெய்வ நிந்தனை செய்பவர்களிடம் விலகுவது நல்லது. உடன் பிறந்தவர், உரிய தருணங்களில் உதவுவர். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும்.புத்திரர் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை, ஓய்வு தேவைப்படலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான அணுகுமுறை பின்பற்றவும். இல்லறத் துணை, குடும்ப நலன் பாதுகாக்க தியாக மனதுடன் செயல்படுவார். தொழில், வியாபாரம் செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் பாராட்டு, வெகுமதி பெறுவீர்கள். பெண்கள், வீட்டை அழகுபடுத்த கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு, படிப்புக்கான தேவை பெருமளவில் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம்: 21.10.14 காலை 6:22 மணி முதல், 23.10.14 மாலை 4.27 மணி வரை.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், தலைச்சுமை பொருட்கள் விற்பவர்களுக்கு உதவலாம்.

லட்சிய மனதுடன் செயல்பட்டு உரிய நன்மை பெறும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் உச்சம் பெற்ற குரு, ஆட்சி பெற்ற சுக்கிரன் அளப்பரிய நற்பலன் வழங்குகின்றனர். மனம், செயலில் சோம்பல் தவிர்ப்பதால், பணி இலக்கு எளிதில் நிறைவேற்றலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தம்பி, தங்கையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நம்பிக்கை தரும். வெளியூர் பயணம், பயன் கருதி மேற்கொள்ளவும்.புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடந்து கொள்வர். அரசு தொடர்பானவர்களிடம், பகைமை வராமல் பேசுவது நல்லது. இல்லறத் துணை, உங்கள் நலன் பாதுகாப்பதில் கண்ணும், கருத்துமாக இருப்பார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். பெண்கள் கணவரின் அன்பு, திருப்திகர பண வசதி கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், பெற்றோரின் அனுமதியின்றி நீண்ட துார இடங்களுக்கு செல்லக்கூடாது.

சந்திராஷ்டம்: 23.10.14 மாலை 4:28 மணி முதல், 25.10.14 இரவு 12:13 மணி வரை.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதுடன், உறவினர் பெண்ணின் திருமணத்திற்கு உதவலாம்

Leave a Reply