வார ராசிபலன் 22.02.2015 முதல் 28.02.2015

images (7)

நேர்மையாக செயல்புரிந்து பல நலமும் பெறும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தன ஸ்தான அதிபதி சுக்கிரன் உச்ச பலத்துடன் உள்ளார். சூரியன், புதன், ராகு கூடுதல் நற்பலன் தருவர். இதனால், நண்பர்களின் உதவியும், பணவரவும் அதிகரிக்கும். தைரியமான செயல், தொழில் வளர்ச்சி பெற உதவும். வாகன பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். புத்திரர் அறிவு, கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவர். எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை விலகும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில் சார்ந்த பண உதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பணியாளர், கூடுதல் வேலைவாய்ப்பை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வீர்கள். பெண்கள் குடும்ப உறவுகளை பொறுப்புணர்வுடன் பாதுகாத்திடுவீர்கள். மாணவர்கள், படிப்பில் முன்னேற அனுகூலம் மிகுந்திருக்கும்.

பரிகாரம்:
ஆஞ்சநேயரை வழிபடுவதால், மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும்.

சமூக நடப்புகளுக்கு ஏற்ப பணிபுரிந்திடும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், செவ்வாய், கேதுவின் நல்லருள் பலமாக உள்ளது. பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். முழுஅளவில் நன்மை கிடைக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள். புத்திரரின் செயல் குறையை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். வழக்கில் சாதகமான தீர்வு கிடைக்க அனுகூலம் உண்டு. இல்லறத்துணை வழி சார்ந்த உறவினருக்கு உதவுவீர்கள்.தொழிலில் முன்னேற்றம் பெற, புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்கள், கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வீர்கள். பெண்கள் சந்தோஷ நிகழ்வுகளினால், மனதில் உத்வேகம் பெறுவீர்கள். மாணவர்கள் எளிய பயிற்சியினால், படிப்பில் நல்ல தேர்ச்சி காண்பீர்கள்.

பரிகாரம்: குபேரரை வழிபடுவதால், தொழில் வளர்ச்சி பெற்று பணவரவு கூடும்.

சுய தேவையை பூர்த்தி செய்ய கடினமாக உழைக்கும், மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, ஆறாம்இடத்தில் சனி, அஷ்டமத்தில் புதன் அனுகூலமாக உள்ளனர். சுய திறமையை, உரிய தருணங்களில் வெளிப்படுத்துவீர்கள். பொறாமை குணம் உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. புத்திரரின் மனக்குறையை இதமான அணுகுமுறையால் சரி செய்வதால், ஒற்றுமை உருவாகும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் செயல்குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால், வாழ்வில் துன்பம் விலகி, நன்மை சேரும்.

உண்மை நட்பினை மதித்து பாதுகாத்திடும், கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு அசுர கிரகம் ராகு, அசுரர்களின் குருவான சுக்கிரன் சம சப்தம அமர்வில் அனுகூலமாக உள்ளனர். புகழ் பெறுகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. வெளியூர் பயணத்தில் மாற்றம் உருவாகும். புத்திரரின் மனக்குறையை சரி செய்வதால், உங்கள் மீதான பாசம் அதிகரிக்கும். எதிர்ப்பாளர் உதவுவது போல இடையூறு செய்வர். இல்லறத்துணையின் அன்பு நிறைந்த வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணியாளர்கள், உடல் நலம் பேணுவதால் மட்டுமே, பணி இலக்கை பூர்த்தி செய்ய இயலும். பெண்கள், குடும்ப நலம் பாதுகாப்பதில், உரிய கவனம் கொள்வீர்கள். மாணவர்களின் வசீகர செயல் நற்பெயர் பெற்றுத்தரும்.

பரிகாரம்: அன்னை அபிராமியை வழிபடுவதால், உறவினர்களின் உதவி கிடைக்கும்.

திட்டமுடன் செயல்பட்டு வெற்றி இலக்கை அடையும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு புதன், சுக்கிரன், சந்திரன் உரிய அளவில் நற்பலன் தருவர். பலநாள் தாமதமான பணி நிறைவேறும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உரிமையுடன் பழகுபவர்களை கண்டித்து பேசுவதில் நிதானம் வேண்டும். புத்திரரின் தேவையை நிறைவேற்ற கூடுதல் பணம் செலவாகும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையின் மனதில் நம்பிக்கை வளர, இனிய அனுபவங்களை நினைவுபடுத்துவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சிறப்பாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். மாணவர்கள் வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

சந்திராஷ்டமம்: 21.2.15 நள்ளிரவு 12:01 மணி முதல்22.2.15 நள்ளிரவு 1:35 மணி வரை

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், பணிகள் சிறப்பாக நிறைவேறும்.

இரக்க மனதுடன் செயல்பட்டு நற்பெயர் பெறும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், குரு, சனி அதிக அளவில் நற்பலன் தருவர். மன உறுதியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்க, சிலருக்கு அனுகூலம் உண்டு. புத்திரர் அறிவுத்திறனில் முன்னேற்றம் அடைவர். உறவினர்களின் மனதில், உங்கள் மீதான நல்ல எண்ணம் அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேசக் கூடாது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணியாளர்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். பெண்கள், குடும்ப நலன் கருதி பொறுமை காத்திடுவீர்கள். மாணவர்கள், நன்றாக படித்து நற்பெயரும், புகழும் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 22.2.15 நள்ளிரவு 1:36 மணி முதல்25.2.15 அதிகாலை 5:38 மணி வரை.

பரிகாரம்: அர்த்த நாரீஸ்வரரை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை பலம் பெறும்.

 தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிந்து நன்மை பெறும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு புதன், கேது, செவ்வாய் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். பகட்டான செயல்களில் ஈடுபட வேண்டாம். வாழ்வில் முன்னேற்றம் பெற, புதிய வாய்ப்பு வரும்.
குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். சிலர் வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் செயல்களை ஒழுங்கு செய்வது நல்லது. எதிரியால் வருகிற கெடுசெயல் இஷ்ட தெய்வ அருளால் விலகும். இல்லறத்துணை கருத்து வேற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க, சில மாற்றம் பின்பற்றுவது அவசியம். பணியாளர்களுக்கு பணி இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பெண்கள், நகை வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், பொது அறிவு சிந்தனை வளர்த்துக் கொள்வர்.

சந்திராஷ்டமம்:
25.2.15 அதிகாலை 5:39 மணி முதல்27.2.15 காலை 11:44 மணி வரை

பரிகாரம்: காமதேனுவை வழிபடுவதால், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

பிறருக்கு உதவுவதில் முதன்மை மனம் கொண்ட, விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு உச்சம் பெற்ற நிலையில், அதிக நற்பலன் தருவர். கன்னி ராசியில் உள்ள ராகு, முக்கியமான செயல் நிறைவேற உதவுவார். அவமதித்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் உத்வேகமுடன் செயல்பட துணை நிற்பீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களை உபசரிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணியாளர், நற்பெயரை பாதுகாப்பது அவசியம். பெண்கள், வீட்டை அழகுபடுத்த கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள், பெற்றோர் சொல்லை மதித்து செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 27.2.15 காலை 11:45 மணி முதல்28.2.15 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதால், துன்பம் அணுகாத நல்வாழ்வு ஏற்படும்.

அறச்செயல்களில் முழு மனதுடன் ஈடுபடும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பாக்யம், லாப ஸ்தான அதிபதிகளான சூரியன், சுக்கிரன் நற்பலன் தருவர். கருணையும், இரக்கமும் நிறைந்த செயல்புரிந்து நற்பெயர் பெறுவீர்கள். புதியவர்களின் உதவி கிடைக்கும். நீண்ட துார பயணங்களில் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். புத்திரர் நன்மை, தீமை எதுவென உணராமல் நடந்து கொள்வார்; இதமாக அறிவுரை சொல்லுங்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பகைமை எண்ணம் மாறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பணியாளர், தன் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள், உடல்நலத்தில் உரிய கவனம் கொள்ளவும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால், தொழில் சார்ந்த இடையூறு விலகும்.

வாழ்வில் நல்ல ஒழுக்கம் விரும்பி பின்பற்றும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது, சுக்கிரன், குரு, சனி கூடுதல் நற்பலன் தருவர். முருகப் பெருமானின் நல்லருள் பரிபூரணமாக கிடைக்கும். சந்தோஷத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். எதிர்ப்பு விலகி அனுகூலம் தருகிற வாழ்வியல் சூழல் உருவாகும். புத்திரர் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படும். இல்லறத்துணை ஒற்றுமை குணம் பாராட்டுவார். தொழிலில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர், நற்பெயர் பெற அனுகூலம் உண்டாகும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்கள் சிறப்பு பெற உதவுவீர்கள். மாணவர்கள், லட்சியத்துடன் படித்து நல்ல தேர்ச்சி பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும்.

நிகழ்வுகளுக்கு ஏற்ப பக்குவ மனதுடன் செயல்படும், கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன் மற்றும் சந்திரன் நற்பலன் தருவர். பேசும் வார்த்தை இனிதாக அமைந்து, புதியவர்களிடம் நன்மதிப்பு பெற்றுத்தரும். பணிகளை திட்டமிட்டு செய்வதால் மட்டுமே, உரிய பலன் கிடைக்கும். தாய்வழி உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். புத்திரரின் ஆர்வமிகு செயல் குளறுபடியை உருவாக்கலாம். நிதானம் பின்பற்ற சொல்லுங்கள். அளவான உழைப்பு, சீரான ஓய்வு மட்டுமே உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் உயர்ந்திட உறுதுணைபுரிவார். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர், பணக்கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடுவதால், உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

திட்டம் நிறைவேற உரிய வழிமுறை பின்பற்றும், மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, புதன் நற்பலன் தருவர். புதிய செயல்கள் சிறப்பாக அமையும். சுயலாபம் கருதி புகழ்ந்து பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தாயின் வழிகாட்டுதல் முக்கியமான நன்மை ஒன்றை பெற்றுத்தரும். புத்திரரின் விருப்பங்களை, தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு வருகையால், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். இல்லறத்துணை குடும்ப நலனுக்கு, தேவையான பணி மேற்கொள்வார். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், சில சீர்திருத்தம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள், புதியவர்களின் நட்பை பெறுவர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால், தொழிலில் பணவரவு கூடும்.

Leave a Reply