வாரபலன். 13.04.2014 முதல் 19.04.2014 வரை

8

மேஷம் : சுறு சுறுப்பாக பணிபுரிந்து, வாழ்வில் நற்பலன் பெறும், மேஷ ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு தனம், சப்தம ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். செவ்வாய், கூடுதல் அளவில் நற்பலன் தருகிறார். வாழ்வில் குறுக்கிடுகிற சிரமங்களை, சமயோசிதமான செயலால் சரி செய்வீர்கள். சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாப்பதில், தகுந்த அக்கறை வேண்டும்.புதிய செலவினங்களுக்காக, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். புத்திரர் சஞ்சல மனதுடன் நடந்து கொள்வர். உடல்நலம் ஆரோக்கியமா இருக்கும். இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க, நல்ல ஆலோசனை சொல்வார். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்களுக்கு, ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவி கிடைக்கப் பெறுவர். மாணவர்கள், அக்கறையுடன் படித்து சீரான தேர்ச்சி விகிதம் பெறுவர்.
சந்திராஷ்டமம்: 17.4.14 மாலை 5:26மணி முதல் 19.4. 14இரவு 9:24 மணி வரை.

ரிஷபம்: இனிய வார்த்தை பேசி, பிறர் மனம் கவரும், ரிஷப ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, ஆறாம் இடத்தில் சனி, ராகு அனுகூல பலன் தரும் கிரகங்களாக உள்ளனர். குடும்ப செலவுக்கான பணவசதி, தாராள அளவில் இருக்கும். நற்செயலால் நண்பர், உறவினரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வாகன பயன்பாடு அதிகமாவதால், பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். புத்திரரின் நியாயமான எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதால் மட்டுமே, உங்களிடம் அதிகபாசம் கொள்வர்.எதிரி தன் சிரமங்களின் காரணமாக விலகிப்போவர். இல்லறத்துணையின் மனதில், உங்கள் மீதான நம்பிக்கைக்கு குறை எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உருவாகி, உபரி பணவரவைத் தரும். பணியாளர்களுக்கு, கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர அளவில் சன்மானம் கிடைக்கும். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினரின் குறையை, விமர்சிக்க வேண்டாம். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருட்களை, கவனமுடன் பயன்படுத்தவும்.
சந்திராஷ்டமம்: 19.4.14 இரவு 9:25 மணி முதல்அன்று நாள் முழுவதும்.

 

மிதுனம் : நற்குணம் உள்ளவரின் அறிவுரை மதித்து, செயல்படும், மிதுன ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன், பதினொன்றாம் இடத்தில் சூரியன், புதன், கேது அனுகூலமாக உள்ளனர். மனம் செயலில், புத்துணர்வு உருவாகும். புதிய பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்து, உதவி கிடைக்கும். நண்பருடன் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரரின் நற்செயல் பெருமை தேடித்தரும். பரிசுப்பொருள் வாங்கித் தருவீர்கள். உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் நடந்து கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பெற, சில மாற்றம் பின்பற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்பத்தேவை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, படிப்பில் உயர்ந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

கடகம் : தயக்கமின்றி, பிறரது நற்குணம் பாராட்டுகின்ற, கடக ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு மூன்றில் செவ்வாய், எட்டாம் இடத்தில் சுக்கிரன், பத்தாம் இடத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். செயல் இனிதாக நிறைவேற, இஷ்ட தெய்வ அருள்பலத்துடன், முருகப்பெருமானின் நல்லருளும் துணை நிற்கும். துணிச்சல் மிகுந்த செயல் புரிந்து நற்பெயரும், புகழும் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர் புதிய நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவர்.எதிரியால் இருந்த தொல்லை விலகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து, ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொறுப்பான பதவி பெற அனுகூலம் உண்டு. குடும்ப பெண்கள், கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் நண்பரின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

 

சிம்மம் : காலத்தை பொன் போல கருதி, செயல்படும், சிம்ம ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில், சனி, ராகு, ஆதாய ஸ்தானத்தில் குரு பகவான், அனுகூலமாக உள்ளனர். மனதில் எதிர்கால வாழ்வின் சிறப்பு குறித்த நம்பிக்கை வளரும்.
தாமதமாக இருந்த பணிகளை, உத்வேக செயலால் நிறைவேற்றுவீர்கள். நம்பகத் தன்மை குறைவானவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் பேசுகிற வார்த்தை ஒவ்வொன்றும், அறிவுப்பூர்வமாக இருக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.இல்லறத்துணையின் கவனக் குறைவான பேச்சு, செயலை பொறுத்துக் கொள்வதால், உங்கள் மீதான நன்மதிப்பு கூடும். தொழில்,வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற நடைமுறை பின்பற்றுவீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டம் திட்டம் மதித்து நடப்பதில், கூடுதல் அக்கறை கொள்வீர்கள். பெண்கள், கணவரின் கருத்துக்கு ஏற்ப நடப்பதால், குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

 

கன்னி : குடும்ப பெருமை காப்பதில், அக்கறை மிகுந்த, கன்னி ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு புதன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். சிலர், உங்களுக்கு செய்த இடையூறுகளின் தாக்கம் மனதில் சோர்வை உருவாக்கலாம். எதிர்கால வாழ்வின் லட்சியங்களை உணர்ந்து செயல்படுவது, ஊக்கம் பெற உதவும். பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை, அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணமுறை எளிதாகும்.புத்திரர் ஆர்வ மிகுதியால், முரண்பட்ட செயல்களில் ஈடுபடுவர். இதமான அணுகுமுறை, அவர்களை நல்வழி நடத்த உதவும். சேமிப்பு பணம், அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள், பணச் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது நல்லது. பெண்கள், சமையலறைப் பணிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றுவதால், தேர்ச்சி விகிதம் சீராகும்.

 

துலாம் : தன் தகுதி, திறமை உணர்ந்து பணிபுரிகின்ற, துலாம் ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ள அசுர குரு சுக்கிரன், ஒன்பதாம் இடத்தில் உள்ள தேவகுரு, வியாழன் அனுகூல பலன்களை வழங்குகின்றனர். நண்பர்களின் உதவியால் வாழ்வில் சில நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த அவநம்பிக்கை விலகும். சமூகப் பணியில் ஓரளவு ஈடுபடுவீர்கள். வாகன பயன்பாடு, சராசரி அளவில் இருக்கும்.
மகளின் ஜாதகயோக பலன், புதிய சொத்து வாங்குவதற்கு உதவியாக இருக்கும். எதிர் மனப்பாங்கு உள்ளவரும், உங்களிடம் நல்ல எண்ணங்களுடன் பழகுவர். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி, வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களுக்கு, கூடுதல் வேலை வாய்ப்பு, சன்மான உயர்வு கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர, பிற விஷயத்தில் விவாதம் வேண்டாம்.

 

விருச்சிகம் : நேர்மை வழியில் செயல்பட்டு, நற்பலன் பெறும், விருச்சிக ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு குரு, சனி, ராகு தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர். எவரிடமும் நிதானித்து பேசி, நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். குடும்பத்தில் சுப மங்கல நிகழ்வு உருவாகும். உறவினர்களிடம் உங்கள் மீதான அன்பு, பாசம் அதிகரித்து கேட்ட உதவி கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் ஏற்படும். புத்திரரின் மனக்குறையை கனிந்த மனதுடன் சரி செய்வீர்கள். எதிரியால் தொல்லை அணுகாத சுமுக வாழ்வு பெறுவீர்கள்.இல்லறத்துணை, உங்களின் அரிய செயல்களை மனமுவந்து பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். அரசு தொடர்பான உதவி பெறலாம். பணியாளர்கள் பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்களின் படிப்புக்கு தேவையான பணவசதி, திருப்திகர அளவில் கிடைக்கும்

தனுசு : தன்னிடம் கேட்பவருக்கு இயன்ற அளவில் உதவும், தனுசு ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன், ஏழாம் இடத்தில் குரு, பதினொன்றில் சனி, ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்களின் அறிமுகம், உதவி கிடைத்து மனம் மகிழ்வீர்கள். இளைய சகோதர வகையில், சுபமங்கல நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இனிதே நிறைவேறும். வீடு, வாகனத்தில் உரிய பயன்பாட்டு வசதி கிடைக்கும்.புத்திரரின் உடல்நலத்திற்கு சிறுஅளவில், மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பகைவரிடம் விலகுவதால், சிரமம் எதிர்வராமல் தவிர்க்கலாம். இல்லறத்துணை நல் ஆலோசனை வழங்கி, உங்களின் செயல் பரிமளிக்க உதவுவார். தொழில், வியாபாரத்தில் போட்டியை திறம்பட சமாளிப்பீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம், கூடுதல் அக்கறையுடன் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள்,
நன்றாக படித்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

 

மகரம் : ஆன்மிக பணிகளில், ஆர்வமுடன் ஈடுபடுகிற, மகர ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன், நான்காம் இடத்தில் புதன் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களின் அமர்வு, எதிர்மறை பலன் தருகிற வகையில் உள்ளது. உங்கள் சொல்லுக்கு மரியாதை தருபவர்களிடம் மட்டும், சரளமாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவுவதால், சிரமம் வரலாம். கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை வளரும்.புத்திரர், தகுதி, திறமையில் முன்னேற்றம் அடைவர். சொத்து தொடர்பான ஆவணம், கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். பணியாளர் குடும்பச் செலவுக்காக, கொஞ்சம் பணக்கடன் பெற வேண்டியதிருக்கும். பெண்கள், சேமிப்பு பணத்தை குடும்பத்தின் சிறுசெலவுகளுக்காக பயன்படுத்துவர். மாணவர்கள், புதியவரை நண்பராக கருதி, பழகுவதில் நிதானம் வேண்டும்.

கும்பம் : சிறு நன்மையையும், பெரிதென கருதி ஏற்கும், கும்ப ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசியில் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் சூரியன், கேது ஐந்தாம் இடத்தில் குரு அனுகூலமாக உள்ளனர். தன்னிடம் பழகுபவர்களின் ஆடம்பர செயல்களை பார்த்து, தாமும் அதுபோல பின்பற்ற விரும்புவீர்கள். இதனால், சிலரது விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடலாம். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.புத்திரர், நண்பருக்கு இணையாக உங்களிடம் சகஜமாக பழகுவார். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை, கூடுதல் அன்பு, பாசம் மனதில் உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, புதிய திட்டம் உருவாக்குவீர்கள். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பு கிடைப்பதை ஏற்பதால், பணவரவு திருப்திகரமாகும். பெண்கள், விதவிதமாக உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களை உபசரிப்பர். மாணவர்கள், பொதுஅறிவில் சிறந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
சந்திராஷ்டமம்: 13.4.14 அதிகாலை 2:57 மணி முதல், 15.4.14 காலை 11:25 மணி வரை

மீனம் : பரந்த மனப்பான்மையுடன் பழகி, நற்பெயர் பெறும், மீன ராசிக்காரர்களே! (13.4.2014 முதல் 19.4.2014 வரை)

உங்கள் ராசிக்கு, பன்னிரெண்டாம், இடத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, ஓரளவு நற்பலன் தருகின்றனர். பிறர் தரவேண்டிய பணம், எளிய முயற்சியால் வந்து சேரும். பொருட்களின் பாதுகாப்பில், உரிய கவனம் பின்பற்ற வேண்டும். உங்களை அவமதித்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. தங்கையின் கூடுதல் அன்பு, பாசம் மனதிற்கு ஆறுதலாக அமையும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும்.புத்திரர் விரும்பிய உணவு வகை வாங்கித் தருவீர்கள். கண் தொடர்பான பிணிக்கு, உடனடி மருத்துவ சிகிச்சை நன்மை தரும். இல்லறத்துணை, தன் கடமை உணர்ந்து செயல்படுவார். தொழில், வியாபாரம் சார்ந்த வகையில், அரசின் சட்டதிட்டம் மதித்து செயல்படவேண்டும். இயந்திர தொழிற்சாலை பணியாளர் பாதுகாப்பு முறை, தவறாமல்
பின்பற்றவும். பெண்கள், கணவரின் வாழ்வியல் சிரமம் நீங்க உதவுவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.
சந்திராஷ்டமம்: 15.4.14 காலை 11:26 மணி முதல்,17.4. 14 மாலை 5:25 மணி வரை.

Leave a Reply