போப்பாண்டவரை அதிர்ச்சியடைய வைத்த 8 வயது சிறுமியின் கேள்வி.

popeகடந்த  சில நாட்களாக ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த போப்பாண்டவர் முதல்கட்டமாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்து  பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்றார். அங்கு பல்வேறு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போப், இறுதியாக ரிசால் பூங்காவில் நடைபெற்ற திறந்த வெளி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

சுமார் ஆறு மில்லியன் பேர் இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. போப்பாண்டவரை சந்தித்த பலர் அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று வந்தனர். அந்த சம்யத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கேட்ட கேள்வி உலகையை நடுங்க செய்யும் வகையில் இருந்தது.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பல அப்பாவி குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை சந்திக்க நேர்கிறது. ஒரு பாவமும் அறியாத சிறு குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார். அப்படி பாதிக்கப்பட்ட குழச்ந்தைகளுக்கு ஏன் கடவுள் உதவுவதில்லை’ என்று கேட்டார்.

அந்த சிறுமியின் கேள்வியால் அதிர்ந்த போப், பின்னர் அந்த சிறுமியை ஆசிர்வதித்து, அவளை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். உடனே கூடியிருந்த மக்களை பார்த்து பேசிய அவர், பதில் கூற முடியாத கேள்வியை இச்சிறுமி கேட்டுள்ளார். வார்த்தைகளால் விவரிக்க முடியாததால் கண்ணீரின் மூலம் அப்பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமையை விவரித்துள்ளார். இதுகுறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply