ரூ.15க்கு ஆரோக்கியமான கோதுமை நூடுல்ஸ். பாபாராம்தேவ் அறிமுகப்படுத்துகிறார்.

ரூ.15க்கு ஆரோக்கியமான கோதுமை நூடுல்ஸ். பாபாராம்தேவ் அறிமுகப்படுத்துகிறார்.
noodles
சுவிட்சர்லாந்து நாட்டின் ‘நெஸ்லே’ நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பாபா ராம்தேவ் சைவ நூடுல்ஸ் தயாரித்து 15 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் என விற்பனை செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நூடுல்ஸ் வரும் 15ஆம் தேதி முதல் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வரும் என்றும் இந்த நூடுல்ஸ் 90% கோதுமையால் செய்யப்பட்டுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் கூறப்படுகிறது.

பிரபல யோகா மாஸ்டர் பாபாராம் தேவ், பதாஞ்சலி என்ற பெயரில் நூடுல்ஸ் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். இவரது பதாஞ்சலி நூடுல்ஸ் அக்டோபர் 15ஆம் முதல் சந்தையில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 15 என்றும் கூறப்படுகிறது.

இந்த நூடுல்ஸ் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித் ராம் தேவ், ” எங்கள் நூடுல்ஸ் 90 சதவீதம் கோதுமையால் தயாரிக்கப்படுகிறது. 10 சதவீதமே மைதா சேர்க்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் மைதாவில்தான் நூடுல்ஸ் தயாரிக்கின்றனர்.  சுவையை விட மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பதாஞ்சலி நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த நூடுல்ஸ் தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமா? என்பது வரும் 15ஆம் தேதிதான் தெரியும் என கூறப்படுகிறது.

Leave a Reply