என்னிடம் ஒரு நயா பைசாகூட சொத்து இல்லை. அதிசயிக்க வைக்கும் மேற்கு வங்க வேட்பாளர்

என்னிடம் ஒரு நயா பைசாகூட சொத்து இல்லை. அதிசயிக்க வைக்கும் மேற்கு வங்க வேட்பாளர்
west bengal
தேர்தலில் போட்டியிடும் பிரபல கட்சிகளின் வேட்பாளர்களிடம் அந்த கட்சியின் தலைமை முதலில் கேட்பது தொகுதியில் எவ்வளவு செய்ய முடியும் என்பதுதான். அதற்கு அந்த வேட்பாளர்கள் லட்சம், கோடி என்று ஒரு கணக்கை கூறுவார்கள். இதற்கு மேல் கட்சித்தலைமை அந்த தொகுதியில் செலவு செய்யும். இது தமிழகத்தின் நிலைமை. ஆனால் மேற்குவங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 7 பேருக்கு ரூ.1000க்கும் குறைவாகத்தான் சொத்து இருப்பதாகவும், இதைவிட அதிசயமாக ஒரு வேட்பாளருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரா தொகுதியில் போட்டியிடும் பபித்ரா பௌரி என்ற வேட்பாளருக்கு வங்கி கணக்கிலோ, கையிலோ எந்த பணமும் இல்லை என்று உறுதி மொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த வேலையும் இல்லை என்றும் சமூக சேவை மட்டுமே செய்து வரும் தன்னிடம் எந்த சொத்து இல்லை, கடனும் இல்லை என்று பௌரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 6 வேட்பாளர்கள், தங்களுக்கு ரூ.1000க்கும் குறைவான மதிப்புள்ள சொத்து இருப்பதாக உறுதி மொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடன் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே பணக்காரர்களாக இருப்பதும், சராசரியாக பலரிடம் ரூ.48 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply