பத்ம விருதுகள் வேண்டாம்: இரண்டு பிரபலங்கள் அறிவிப்பு

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் இரண்டு பிரபலங்கள் பத்ம விருதை ஏற்க முடியாது என அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்கள் இந்த விருதை ஏற்க முடியாது என அறிவித்திருந்த நிலையில் பிரபல வங்காள எழுத்தாளர் சந்தியா முகர்ஜி அவர்களும் பத்ம விருதைத் தான் ஏற்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்

90 வயதான தமக்கு விருது வழங்குவது தம்மை அவமதிப்பது போல் இருப்பதாகவும் எனவே இந்த விருதை அவர் ஏற்க விரும்பவில்லை என்றும் சந்தியா முகர்ஜியின் மகள் சௌமி சென்குப்தா தெரிவித்துள்ளார்