மேற்கிந்திய தீவுகள் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி டிரா
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் இந்திய அணி இரண்டு நாள் ஆட்டம் ஒன்றில் ஆடியது.
கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 93 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்தது. ராகுல் 50 ரன்களும், தவான் 51 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 87 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகளின் ஹோப் 118 ரன்கள் குவித்தார்.