1 ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்த பாகிஸ்தான். மீண்டும் கேவலமான தோல்வி.

Pakistan v West Indies - 2015 ICC Cricket World Cupஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்தியாவிடம் அசிங்கமாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் இன்று நடந்த போட்டியிலும் 150 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமாக தோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 310 ரன்கள் குவித்தது. பிராவோ 49 ரன்களும், ராம்தின் 51 ரன்களும், சிம்மன்ஸ் 50 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை இழந்ததால் அதிர்ச்சி அடைந்தது. அதன்பின்னர் மூன்றாவது, நான்காவது ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட்டை இழந்து ஒரு கட்டத்தில் நான்கு ஓவர்கள் முடிவில் ஒரே ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின்னர் விளையாடிய சோஹேப் மக்சூட் 50 ரன்களும், உமர் அக்மால் 59 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் பாகிஸ்தான் அணீ 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ரசூல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply