கென்யா தலைநகர் நைரோபியில் இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான வெஸ்ட்கேட் என்ற வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை வேட்டையாட ராணுவத்தினரும் போலீசாரும் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டதால் வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 137 பேர் புதைந்ததாக, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் சஹாப் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.