கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்த நியூசிலாந்து அரசு

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவின் பெயர் பேர்வெல் ஸ்பிட் என்பதாகும். இந்த கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு ஒரு பெரிய அலை அடித்ததன் காரணமாக சுமார் 39  திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவை மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நியூசிலாந்து அரசு, உடனடியாக மீட்புப்படையை அனுப்பி, அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் 12 திமிங்கலங்கள் மட்டுமே கடலுக்குள் சென்றது. மற்றவை உயிருக்கு போரடியவாறு துடிதுடித்து மீண்டும் கரை ஒதுங்கியது.

வேறு வழியில்லாததால் அந்த துடித்துக்கொண்டிருக்கும் திமிங்கலங்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே மீட்புப்படையினர் மீதமிருந்த 27 திமிங்கலங்களை சுட்டுக்கொன்றனர்.

நியூசிலாந்து கடற்கரையில் இதுபோன்று திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அடிக்கடி நடந்து வருகின்றது. 1918 ஆம் ஆண்டு, ஆயிரம் திமிங்கலங்களும், 1998ஆம் ஆண்டு 300 திமிங்கலங்களும் கரை ஒதுங்கி இறந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply