ரூ.570 கோடி கண்டெய்னர்கள் என்ன ஆயிற்று? பரபரப்பான தகவல்
தமிழக தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான பணம் பட்டுவாடா நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில் மூன்று கண்டெய்னர்களில் ரூ.570 கோடி கொண்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கண்டெய்னர்களில் உள்ள பணம் கேரளாவில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் கூறப்பட்டாலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டெய்னர்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிமேல் அவர்களே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பணத்தை உரிமை கோரி ஸ்டேட் வங்கியின் உயரிய நிலை அதிகாரிகள் எழுதிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது