சொந்தக்காசில் சூனியம் வைத்து கொண்ட காங்கிரஸ்காரர்கள்
பாரத பிரதமர் நரேந்திரமோடி கொண்டு ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் துன்பப்படுவதை விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் சொந்தக்காசில் சூனியம் வைத்து கொண்டது போல சில கருத்துக்களை கூறியுள்ளனர்.
இந்தியாவில் 50% ஏழைகள் உள்ளனர் அவர்களுக்கு வங்கிக்கணக்கு இல்லை என்று கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் இந்தியாவில் 60% கல்வியறிவு இல்லாதவர்கள். அவர்களால் ஆன்லைன் வர்த்தகம் எவ்வாறு செய்ய முடியும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
50% கிராமங்கள் மின் வசதி இல்லாதபோது காசில்லா பரிவர்த்தனை சாத்தியமா? என்று பொருளாதார மேதை ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமார் 50 வருடங்களுக்கும் மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் மேற்கண்ட பிரச்சனைகளை தீர்க்காமலே இருந்துள்ளது. தற்போது தங்களுடைய 50 ஆண்டுகால ஆட்சியின் லட்சணத்தை அவர்களே பறைசாற்றி வருகின்றனர். இதுதான் சொந்தக்காசில் சூனியம் வைத்து கொள்வது என்பதோ?