குறைந்த விலையில் கிடைக்கும் புரதங்கள் என்னென்ன?

உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புரத உணவு மிகவும் அவசியமாகும்.

100 கிராம் பாதாமை ரூ.100 கொடுத்து வாங்கினால் சுமார் 21 கிராம் புரதம் கிடைக்கும்.

இதே 100 கிராம் வேர்க்கடலையை ரூ.16 கொடுத்து வாங்கினால் சுமார் 25 கிராம் புரதம் கிடைக்கும்.

அதேபோலப் பயிர் வகைகள், கொண்டைக்கடலை ஆகிய உணவுகளின்மூலம் குறைந்த விலையில் அதிக புரதத்தை எட்டலாம்.