ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற என்னென்ன தேவை?
இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. ஒன்று ஏதாவது ஒரு அடையாள அட்டை. இரண்டு வங்கியில் தரும் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்
எந்தெந்த அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்:
1. ஆதார் அட்டை
2. ஓட்டுனர் உரிமம்
3. வாக்காளர் அடையாள அட்டை
4. பாஸ்போர்ட்
5. நூறுநாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
6. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள்
7. பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அட்டைகள்
மேற்கண்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் வங்கி அளிக்கும் ஒரு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் வங்கியின் பெயர் மற்றும் கிளை, விண்ணப்பதாரரின் பெயர், சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் பதிவெண், சமர்ப்பிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ஆகிய தகவல்களை பூர்த்தி செய்து கையெழுத்திட வேண்டும்.
இப்போதைக்கு ரூ.4000 மட்டும் நபர் ஒருவருக்கு புதிய நோட்டுக்கள் தரப்படும். மீதி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.