வாழைப்பூ, வாழைத்தண்டின் பயன்கள் என்ன?

வாழைப்பூ, வாழைத்தண்டின் பயன்கள் என்ன?

2*வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால், வயிற்றுக்கடுப்பு, அல்சர் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

*கொழுப்புச்சத்து இல்லை. நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

*வைட்டமின் பி நிறைந்திருப்பதால், கர்ப்பப்பைக்கு பலம் அளிக்கும். மாதவிலக்குக் காலங்களில் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடல் அசதி, வயிற்றுவலியைக் குறைக்கும்.

*பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ ஒரு சிறந்த உணவு.

*ரத்தசோகையைக் குணப்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

*உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப் பருப்பைச் சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால், உடல் வெப்பம் குறையும்.

வாழைத்தண்டு

*வாழைத்தண்டு குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறைப் போக்கும்.

*சிறுநீரகத்தில் உண்டாகும் கல் அடைப்புகளை நீக்கி, சிறுநீரகத்தைச் சீராகச் செயல்பட வைக்கும்.

*கல்லீரலைப் பலப்படுத்தும்; சருமத்தைப் பாதுகாக்கும்.

*உடலில் உள்ள தேவையற்ற ஊளைச் சதையையும் கொழுப்பையும் குறைக்கும்.

*உடல்பருமனைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும்.

*நரம்புச் சோர்வை நீக்கும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

*வறட்டு இருமல் நீங்கும் வரை, வாழைத்தண்டுச் சாற்றை குடிக்கலாம்.

Leave a Reply