ஆப்பிள் வாட்சில் என்ன இருக்கு?

applewatch_2333076f

ஆப்பிள் அபிமானிகள் மத்தியில் அதன் ஸ்மார்ட் வாட்சுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. அடுத்த மாதம் இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாக உள்ள நிலையில் இதன் அம்சங்கள் பற்றிய கணிப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆப்பிளின் ஐபோனில் இருந்து மாறுபட்ட இடைமுகம் இதில் இருக்கும் என்றும் இதில் உள்ள சாவி பகுதியைக் கொண்டு திரையை ஜூம் செய்வது போல பெரிதாகவும் சின்னதாகவும் ஆக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திரையைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என்று சொல்லப்படுகிறது.

தட்டுவது, தள்ளி விடுவது போன்ற செய்கைகள் மூலம் வாட்சை இயக்க முடியும். வாட்சை நோக்கிப் பேசி, செய்திகளுக்குப் பதில் செய்தி அனுப்பலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இதன் முக்கிய அம்சமாக, அடிக்கடி அசைவொலி எழுப்பி, உட்கார்ந்துகொண்டே இருக்காமல் , சிறிது நடந்து சென்று வர ஊக்குவிக்கும் அம்சம் இருக்கும் என்று ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் கூறியிருக்கிறார். இந்த வாட்ச் கார்களை இயக்கக்கூடிய சாவியாகவும் இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். கார் சாவிக்கான மாற்றாகவும் இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

அமெரிக்கா தவிர ஜெர்மனியிலும் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே சர்வதேச அளவிலும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை எதிர்பார்க்கலாம் எனச் சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply