மகாமகம் என்றால் என்ன?
குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுக ளுக்கு ஒரு முறை இந்த ‘குரு பிரவேசம் நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால், அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.
மகாமக குளம் தோன்றியது எப்படி?
உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார்.
பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.
அமுத குடத்தை வேடன் வடிவில் வந்த சிவபெருமான், அம்பைச் செலுத்தி, குடத்தை உடைத்ததும், அதிலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது.
சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.
அமுதத்தில் தோன்றிய இறைவன்:-
கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார் என்பது வரலாறு. ஆதியில் தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும் அமுதத்தில் தோன்றியதால் அமுதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
குடத்தின் வடிவில் குளம்:-
மகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.
மகாமகத்தன்று தீர்த்தமாடுவதால் என்ன நன்மை?
சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை , இன்னும் புண்ணிய க்ஷேத்திரங்களிலுள்ள பலவகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால், மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராட வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.
மற்றும் இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும். ஆனால், காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக்குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும். இதனை “கும்பகோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்பர்