கமல்ஹாசனின் காவேரி கூட்டம் என்ன ஆச்சு?
காவிரி பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி கூடி நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதற்காக கூட்டப்படும் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார்
இந்த கூட்டம் நாளை அதாவது மே 19ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் உள்பட பல அரசியல் கட்சி தலைவருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டதாகவும் கமல் கூறினார். மேலும் நல்லக்கண்ணு, ஸ்டாலின் உள்பட பலரை சந்தித்து இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த கூட்டம் நடைபெற இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து யாரும் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் செயல் அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துவிட்டதால் இந்த பிரச்சனை முடியும் நிலையில் உள்ளது. எனவே கமலின் முதல் முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது