புதிய வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு? சர்வே முடிவு

vote 1

நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை புதிதாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களின் எண்ணிக்கை 23கோடி பேர் என தேர்தல் ஆணைய புள்ளிவிபரம் கூறுகிறது. தமிழகத்தில் மட்டும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சம் ஆகும். தமிழகத்தின் புதிய வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு என்பது குறித்து தமிழ் முன்னணி பத்திரிகை ஒன்று சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வே முடிவுகள் வருமாறு:

இந்த சர்வே மூலம் இளைஞர்கள் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையும் இது பாராளுமன்றத் தேர்தல் என்பதால், பிரதமர் யார் என்பதில் தனிக்கவனத்துடன் பார்த்து வாக்களிக்கத் தயாராகி இருப்பதையும் அறிய முடிகிறது.

இந்த சர்வேயில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முதலிடத்தில் இருப்பவர் நரேந்திரமோடி. அவருக்கு அடுத்தால்போல் இரண்டாம் இடத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். 3வது இடத்தில் ராகுல்காந்தியும், 4வது இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும் இருக்கின்றனர்.

கட்சிகளின்படி பார்த்தால், பாரதிய ஜனதா கூட்டணிக்கு முதலிடமும், அதிமுக கூட்டணிக்கு இரண்டாவது கிடைத்துள்ளது.

Leave a Reply