பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உலக தரத்தில் பிரமாண்டமான படங்களை கொடுத்தாலும், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளருக்கு அவரால் எந்த லாபமும் கிடைத்தது இல்லை என்பதுதான் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாறு கூறுகின்றது.
ஜெண்டில்மேன், காதலன் என ஷங்கரின் முதல் இரண்டு படங்களை எடுத்த ஜெண்டிமேன் குஞ்சுமோன் திரையுலகை விட்டே சென்றுவிட்டார். ‘ஜீன்ஸ்’ படத்தை எடுக்கும் வரை கோடீஸ்வரராக இருந்த விஜய் அமிர்தராஜ் அந்த படத்திற்கு பின்னர் லட்சாதிபதியாக மாறிவிட்டதாகவும் கூறுவதுண்டு.
ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த கடைசி திரைப்படம் ‘சிவாஜி’ என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல தயாரிப்பாளர்களை சினிமாவை விட்டே விரட்டிய பெருமை ஷங்கரை சேரும் என்கின்றனர் கோலிவுட்டின் பிரமுகர்கள் பலர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். ஒரு சுமாரான மொக்கை படத்தை எடுப்பதற்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்ய வைத்த பெருமையும் ஷங்கரையும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் என்னவோ ‘ஐ’ படம் ரிலீஸாகி ஆறுமாத காலம் ஆகவிருக்கும் நிலையில் ஷங்கரை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இனியும் முன்வருவார்களா? என்பது கேள்விக்குறிதான்.
ஷங்கர் தன்னுடைய பிரமாண்டங்களை எல்லாம் அவர் தயாரிக்கும் படங்களில் காட்டுவது இல்லை. அடுத்தவர் காசில் மட்டுமே பிரமாண்டத்தை காட்டும் வழக்கம் உடையவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் கடைசியாக இயக்கிய ‘ஐ’ திரைப்படம் ஓரளவுக்காவது வசூல் செய்தது என்றால் அதற்கு அஜீத்தின் பெருந்தன்மைதான் காரணம் என்கிறார் கோலிவுட் பிரமுகர் ஒருவர். அஜீத் மட்டும் வீம்புக்கு தனது என்னை அறிந்தால்’ படத்தை ‘ஐ’படத்திற்கு எதிராக ரிலீஸ் செய்திருந்தால் ஷங்கர் படம் ப்ளாப் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது.