ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்பில் என்ன சிக்கல்?
மூன்றாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைய அதிக வாய்ப்பு இருந்தபோதிலும் ஒருசிலரின் சுயநலத்தால் இந்த இணைப்பு நடைபெற முடியவில்லை என்று அதிமுக தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
ஓபிஎஸ் அவர்களை முடிவெடுக்க முடியாமல் மூன்று பேர் நெருக்கடி கொடுப்பதாகவும், இணைப்பால் அந்த மூன்று பேர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித லாபமும் இல்லாததால் ஓபிஎஸ்-ஐ முடிவெடுக்க விடாமல் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி தர ஈபிஎஸ் அணி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும்போது மேலும் சிலருக்கு பதவி தர வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ்-க்கு இதில் பூரண திருப்தியே என்றும் இருப்பினும் அவரை சூழ்ந்துள்ளவர்களால் அவர் இறுதி முடிவு எடுக்க திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. இணைப்புக்கி கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஓபிஎஸ் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதே அனைத்து அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது