சசிகலாவை அறைந்தாரா முதல்வர்? பதவியை காப்பாற்ற சசிகலாவின் நாடகமா?
திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா அறைந்ததாக கூறப்பட்ட சம்பவத்தின் காரணமாக கடந்த ஞாயிறு சசிகலாவை நேரில் அழைத்து ஜெயலலிதா கண்டித்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பின்போது ஜெயலலிதா தன்னை அறைந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் கடந்த ஞாயிறு அன்று சசிகலாவை ஜெயலலிதா சந்திக்கவே இல்லை என்றும் தம்பித்துரை மற்றும் பூங்குன்றம் ஆகிய இருவரும் சசிகலாவை கண்டித்து, ராஜினாமா லட்டர் எழுதி வாங்கியுள்ளதாகவும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றிவிட்டார் சசிகலா அரங்கேற்றி உள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் டெல்லி விமான நிலையத்தில் தலைவியை தரக்குறைவாக பேசியதால்தான் சசிகலா அறைந்தார் என்பதிலும் உண்மை கிடையாது என்றும் இந்த சண்டைக்கு முக்கிய காரணமே கொடுக்கல் வாங்கல் தகராறு என்றும் கூறப்படுகிறது. டெல்லி விமானநிலையத்தில் சிவாவைப் பார்த்ததுமே, ‘வேர் ஈஸ் மை மணி?’ என்று கேட்டுத்தான் அவருடைய கன்னத்தில் அறைந்ததாகவும், இந்தத் தகவல் தி.மு.க. புள்ளி ஒருவரின் உதவியாளர் மூலமே வெளியில் கசிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கனிமொழி மூலம் திமுகவில் சேர சசிகலா முயற்சி செய்து வருவதாகவும் ஒருசெய்தி மிக வேகமாக பரவி வருகிறது