பதன்கோட் தாக்குதலுக்கு மோடி-நவாஸ் நட்புதான் பின்னணியா? திடுக்கிடும் தகவல்

பதன்கோட் தாக்குதலுக்கு மோடி-நவாஸ் நட்புதான் பின்னணியா? திடுக்கிடும் தகவல்
modi
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு பின்னணியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே நட்பு அவரை கோபப்படுத்தியதாகவும், அதனால் நடத்திய தாக்குதலே பதன்கோட் தாக்குதல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு திடீர் விசிட் செய்த பிரதமரின் நடவடிக்கையை உலக நாடுகள் அனைத்தும் வரவேற்ற நிலையில் பாகிஸ்தான் தளபதி மட்டும் இந்த நட்பை ரசிக்கவில்லை. பாகிஸ்தானை பொறுத்தவரையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய அரசுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தால், அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது இதற்கு முன்பும் நடந்த நிகழ்வுகள்தான். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையால்,  இந்திய வீரர்களும் பதிலடி கொடுக்க நேரிடுவதால் இருநாடுகள் இடையே மீண்டும் கசப்புணர்வுகள் தலை தூக்கிவிடும்.

அப்படி இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளே இந்தியா – பாகிஸ்தான் உறவை சீர்குலைக்கும் விதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவார்கள். இதன் பின்னணியிலும் பெரும்பாலும் பாகிஸ்தான் ராணுவம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

அதுபோன்ற ஒரு தாக்குதல்தான் தற்போது பதன்கோட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய மோடி – நவாஸ் சந்திப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் மிகுந்த கசப்புணர்வுடன் பார்த்ததாகவும், அந்த வெறுப்பின் விளைவே பதன்கோட் தாக்குதல் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மொத்ததில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகள் இடையே மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

Chennai Today News: What is the reason for Padhankot attack

Leave a Reply