இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படத்திற்கு பயன்படுத்தப்படாத நவீன வகை கேமராவை லிங்கா படத்தில் பயன்படுத்தி வருகின்றனர். Phantom Flex 4K என்ற வகையான இந்த கேமிராவை இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படத்திலும் பயன்படுத்தப்படவில்லை. அதுவும் இந்த கேமிராவை ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் பயன்படுத்துகிறார். எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலுதான் லிங்கா படத்திற்கும் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லிங்கா படத்திற்கு ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் என்பவர் சண்டைப்பயிற்சி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம், ஆரம்பம் போன்ற படங்களில் பணிபுரிந்தவர். கமல்ஹாசனின் பரிந்துரையின்பேரில் இவர் லிங்கா படத்தின் சண்டைப்பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் ஏற்கனவே லிங்கா படத்திற்கான மூன்று டியூன்களை முடித்து இயக்குனரிடம் கொடுத்துவிட்டார். இன்னும் இரண்டு பாடல்களுக்கு மட்டுமே அவர் டியூன் போடவேண்டியதுள்ளது.