வாட்ஸ் அப் இணை நிறுவனர் திடீரென பதவி விலகியது ஏன்?

வாட்ஸ் அப் இணை நிறுவனர் திடீரென பதவி விலகியது ஏன்?

உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் கோயம் என்பவர் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது தனிப்பட்ட வாதத்தை ஃபேஸ்புக் நிறுவனர் ஏற்கவில்லை என்பதே அவர் பதவி விலகியதற்கான காரணமாக கூறப்படுகிறது

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜேன் கோயம் கூறிய ஒரு முக்கிய கருத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர் பதவி விலகியதாகவும், இந்த பதவிக்கு விரைவில் வெறொருவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply