வாட்ஸ்-அப் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, உரையாடல்களை கூகுள் ட்ரைவில் சேமிக்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆப்-லைன் உரையாடல்களை சேமிக்கும் வசதி இருந்தபோதும் வாட்ஸ்-அப் உரையாடல்களை கூகுள் ட்ரைவில் சேமிக்கும் வசதி இருந்தால் சௌகரியமாக இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக வெளியிட்டு இருக்கும் ஆன்டிராய்டு போன்களுக்கான வெர்சனில் (v2.12.45 ) இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை பயன்படுத்த வேண்டுமானால், வாட்ஸ்-அப்பின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று புதிய வெர்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பின்பு வாட்ஸ்-அப்பின் சாட் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று கூகுள் ட்ரைவில் சேமிக்கும் பகுதியை தேர்ந்தேடுக்கவேண்டும். அடுத்து உங்கள் உரையாடல்களை சேமிக்க விரும்பும் ஜி மெயிலுடன் இணைக்கவேண்டும். அதன் பிறகு உரையாடல்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் படி கூகுள் ட்ரைவில் சேமிக்கப்பட்டிருக்கும்.
விண்டோஸ் போன் மற்றும் ஆப்பிள் ஐ.ஒ.எஸ் போன்களுக்கு இந்த வசதி இன்னும் கிடைக்கவில்லை. அதே போல் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இந்த புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.