வாட்ஸ் அப் சேவையை இனி முற்றிலும் இலவசமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்று அதன் நிறுவனர் ஜேன் கௌம் அறிவித்துள்ளார்.
உலகம் முழுக்க, ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள ஆப்ஸ் வாட்ஸ் அப். இதற்கு இளைஞர்கள், முதியவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களும் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், முதல் ஆண்டில் மட்டுமே சேவையை இலவசமாக பயன்படுத்தமுடியும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தி வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் ஆண்டிற்கு ரூ.54 கட்டணத்தில் சேவை அளித்து வந்தது. ஆனால் தற்போது இந்தக் கட்டணமும் ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனர் ஜேன் கௌம் தெரிவித்துள்ளார்.