ஒருசில மணி நேரங்களில் தளர்ந்தது வாட்ஸ் அப் கட்டுப்பாடு
வாட்ஸ் அப் மூலம் பரிமாறப்படும் அனைத்து விஷயங்களையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஒழுங்குப்படுத்த சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது,. அதன்படி வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் அனைத்தையும் 90 நாட்களுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற திட்டவரைவு வெளியான சிலமணி நேரங்களில் கடும் எதிர்ப்பு காரணமாக வாட்ஸ் அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள், தாங்கள் அனுப்பும் அல்லது பெறும் அனைத்து செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவைகளை கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்களை விசாரணைக்காக அரசு கேட்கும்போது வழங்க வேண்டியதும் கட்டாயம் என்றும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வாட்ஸ் அப்பில் ஒருசிலருக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான தகவல்கள் வருகின்றது. இவையெல்லாவற்றையும் 90 நாட்களுக்கு சேமித்து வைத்தால் மொபைல்போன் ஹேங் ஆகிவிடும் ஆபத்து உள்ளது என்றும் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர்களும் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து தனது நிலைப்பாட்டில் இருந்து தற்போது மத்திய அரசு பின்வாங்கி உள்ளது. வாட்ஸ் அப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தியுள்ளது