அஜித் 57′ படக்குழுவினர் சென்னை திரும்புவது எப்போது?
அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி தற்போது ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வெளிநாட்டு காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘அஜித் 57’ படக்குழு சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்துக்கு முதல்முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். சென்னை திரும்பியதும் ஒருசில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை படமாக்கவுள்ள இயக்குனர் சிவா, பின்னர் மீண்டும் தீபாவளி கழித்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அங்கு அஜித், அப்புக்குட்டி காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.