ஸ்டாலின் தலைவர் ஆவதில் ஆட்சேபணை இல்லை. அழகிரி
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் மு.க.அழகிரி சமீபத்தில் மூன்று முறை சந்தித்துள்ளதால் விரைவில் அவர் கட்சிக்குள் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையை அழகிரி ஏற்றுக்கொண்டால் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்ற கருணாநிதியின் கண்டிஷனுக்கு கிட்டத்தட்ட அழகிரி ஏற்றுக்கொண்டதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் அதே நேரத்தில் கருணாநிதி இருக்கும்வரை இன்னொருவரை தலைவராக ஏற்க தான் விரும்பவில்லை என்றும் அவருக்குப் பிறகு ஸ்டானின் தலைவராக வருவதற்கு எந்த எதிர்ப்பையும் காட்ட விரும்பவில்லை’ என்றும் அழகிரி உறுதிபட கூறியுள்ளாராம்.
ஸ்டாலின் தவிர கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரையும் இதை ஏற்றுக்கொண்டதால் விரைவில் கண்கள் பனித்தது இதயம் இனித்தது’ போன்ற ஓர் அறிக்கை வரும் என்று திமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.