காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும்: தினகரன் ஆரூடம்

காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும்: தினகரன் ஆரூடம்

கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று டிடிவி தினகரன் ஆரூடம் கூறியுள்ளார்

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கான தண்ணீர் 177.25 டிஎம்சி என்ற அளவாக, குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவதற்கு வசதியாக காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த ஆறு வார காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் இல்லை, அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் வரும் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் இதுகுறித்து இன்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று கூறினார். மேலும்

திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் மக்களுக்காக போராடினால் கலந்து கொள்வோம் என்று கூறினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஏப்ரல் 8-ம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.

Leave a Reply