இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்போது? புதிய தகவல்
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முடிவடைவதை அடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநிலத் தேர்தலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்வானி ஒருவேளை மறுத்தால் அடுத்த வாய்ப்பு ற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் தரப்பில் இருந்து பெண் வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை (பிரதிபா பாட்டீல்) காங்கிரஸ் கூட்டணி நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். எனவே 37 லோக்சபா எம்பிக்களையும் 13 ராஜ்யசபா எம்பிக்களையும் 134 எம்.எல்.ஏக்களையும் வைத்திருக்கும் அதிமுகவின் முடிவு இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.