பவானி சிங் வாதம் முடிந்தது. தீர்ப்பு எப்போது? அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

Independence Day celebration in Chennaiமுன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது வாதத்தை நேற்றுடன் நிறைவு செய்துவிட்டதால் தீர்ப்பு தேதி நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்கல் கூறுகின்றன.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு பெங்களூரு ஐகோர்ட்டில் கடந்த 38 நாட்களாக நடைபெற்று வருகிறது.

 இந்த வழக்கின் விசாரணையில், ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பினர்களின் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் கடந்த 6 தினங்களாக தனது வாதத்தை நடத்தினார். இந்நிலையில் அவரது வாதமும் நேற்றுடன் முடிவடைந்தது. பவானி சிங் தன்னுடைய வாதத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் பவானிசிங் அறிக்கையாக சமர்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply