சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பது எப்போது என்பது குறித்து செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபட்ட நிலையில் அவர் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பதற்கு முன்னர், வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை கவர்னரிடம் கொடுக்க வேண்டும். இத்துடன் அதிமுக எம்.எல்.எக்கள் ஜெயலலிதாவை அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படதற்கான கடிதத்தை ஜெயலலிதா கவர்னரிடம் கொடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் தேதி இன்றுடன் முடிவடைகிறது. எனவே, நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைய வேண்டியிருப்பதால் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பதவியேற்பு விழா மிக விரைவில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருகின்றன.
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவிற்காக கவர்னர் மாளிகையில் ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இந்த விழா மிக எளிய முறையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.