நம்மூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருக்கின்றது போலும். அதனால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஒரு புதிய முறையை ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி பொது இடத்தில் சிறுநீர் கழித்தால், கழித்தவர் மீதே அந்த சிறுநீர் திருப்பியடிக்கும் நவீன பெயிண்ட் ஒன்றை ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1BLNnex” standard=”http://www.youtube.com/v/uoN5EteWCH8?fs=1″ vars=”ytid=uoN5EteWCH8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5110″ /]
பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர் கழிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது சுற்றுப்புற சூழலை கெடுப்பது மட்டுமின்றி அந்த பகுதியில் துற்நாற்றம் பரவி வியாதிகளையும் உருவாக்குகின்றது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்த ஜெர்மனி விஞ்ஞானிகள் புதிய ரக பெயிண்ட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பெயிண்டை சுவர்களில் அடித்துவிட்டால் போதும், யாராவது சுவற்றின் மீது சிறுநீர் கழித்தால் அது அவர்கள் மீதே திருப்பியடிக்கும்.
ஜெர்மனியில் உள்ள ஹாம்பிரிக் நகரில் அமைந்துள்ள வீடுகளில் சோதனை அடிப்படையில் இந்த பெயிண்ட் அடிக்கப்பட்டு, சுவற்றின் மீது இந்த சுவரில் சிறுநீர் கழித்தால் அது திருப்பியடிக்கும் என்ற வாசகத்துடன் கூடிய போர்டும் அப்பகுதி மக்கள் மாட்டி வைத்துள்ளனர். இந்த பெயிண்ட் நம்மூருக்கு எப்பொழுது வரும் என்பதே நமது ஆவல்.