ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா?

அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது என்ன?

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன

குறிப்பாக தெலங்கானா உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும் , பஞ்சாப் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை முடித்துக் கொள்ளவும் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மே 15ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கவும் மதம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply