பரபரப்பு தகவல்
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளும் இன்னும் நடைபெறவில்லை என்பதும் 12-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் இன்னும் திருத்தம் செய்யப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தேசிய அளவில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுமோ, அப்போதுதான் தமிழகத்தில் இருந்து திறக்கப்படும் என்றும் இப்போதைக்கு ஜூன் இறுதி வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன